Download Chereads APP
Chereads App StoreGoogle Play
Chereads

இரு உயிர்

Iniyan_Siva
--
chs / week
--
NOT RATINGS
14.9k
Views
VIEW MORE

Chapter 1 - الفصل الأول

أقدم هذه القصة لجميع العشاق❤️

கார்த்தியின் வாழ்க்கை...

29 ஜூலை 2012

நேரம் - 6:22

தூங்கி கொண்டு இருந்த கார்த்தி கண்களைத் திறந்தான், அவன் வீட்டிற்கு வெளியே பார்த்தான், வெளியே முழுவதும் பணி மூட்டமாக இருந்தது , கார்த்தியின் அம்மா அவனுக்கு தேனீர் கொடுத்தாள், அதன்பின் உன் அப்பா 9:30 மணி அளவில் ஊருக்கு வர இருப்பதாகவும் நீ அவரை அழைத்து வர வேண்டும் என்று கார்த்தியின் அம்மா கார்த்தியிடம் கூறினாள், ஆனால் கார்த்தி மறுத்து விட்டான், அவன் அம்மா கட்டாயப்படுத்தி அவனை போக சொன்னாள். கார்த்தியின் கண்களில் தூரப்பார்வை சற்று குறைவாக இருக்கும் ஆனால் அது இவன் அம்மாவிற்கு தெரியாது, அதனால்தான் கார்த்தி தன் தந்தையை அழைத்து வர மறுத்தான், ஆனாலும் கார்த்தி வாகனம் எடுத்துக் கொண்டு தன் தந்தையை அழைத்து வர சென்றான்.

தர்ஷினியின் வாழ்க்கை.....

ஒரு நாள் இரவில் தர்ஷினி சாலையில் நடந்து கொண்டிருந்தாள் அப்போது யாரோ ஒருவர் இவளை பின்தொடர்ந்து வருவது போல் தெரியவந்தது, திரும்ப பார்த்தால் காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு கருப்பு உருவம் துரத்திக்கொண்டு வருவது போல் தெரிந்தது, அவள் ஓடத் தொடங்கினால் , அந்த உருவம் அருகில் வரும்போது திடீரென கண்களை திறந்தாள் , அவள் கண்டது அனைத்தும் கனவு என்று தெரிய வந்தது.

தர்ஷினி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள், இவள் அனைவரிடமும் நன்றாக பேசுவாள், தன் நண்பர்களுக்காக எந்த உதவியையும் செய்து தருவாள். இவளுக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்துகொண்டே இருக்கும்.

ராஜனின் வாழ்க்கை....

ராஜன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென அவன் முகத்தில் ரத்தம் தெளித்தது , உடனே விழித்து பார்த்தான் அப்போது அவனிடம் வேலை பார்க்கும் ஆட்கள், ஒரு நபரை துண்டு துண்டாக வெட்டிக் கொண்டு இருந்தனர் அப்போது ராஜன் பொறுமையாக வெட்டுங்கள் என கூறிவிட்டு அமைதியாக சென்றான்.

ராஜன் பணத்திற்காக கொலை செய்யும் தொழிலை செய்து வருகிறார் , அவன் தன் குடும்பத்து மீதும் தன் மகன் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். தன் மகனுக்காக எதுவும் செய்ய தயாராக இருந்தார்.