30.07.2012
மறுநாள் காலையில் ராஜன் நண்பர் அந்த பத்திரிகையாளர் விவரங்களை சேகரித்து வந்தார். அவர் பெயர் கார்த்தி என்றும் ஐந்து வருடங்கள் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார், இவர் இப்போது காவேரி ஆற்றங்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு அம்மன் கோவில் பின் புறத்தில் மறைந்து கொண்டு இருக்கிறான், இவனை நம் ஆட்கள் ஏற்கனவே பின் தொடர்ந்து சென்றுள்ளனர் என்று அந்த நண்பர் ராஜனிடம் கூறினார். கார்த்தியை பிடித்து வாருங்கள் என்று அவன் அடியாட்களிடம் கூறினார்.
நேரம் - 1:10 மதியம்
ஃபரினா தன் தம்பிக்காகவும் மற்றவர்களுக்காகவும் மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டு இருந்தாள். அப்போது யாரோ ஒருவர் மசூதி முன்பு கத்திக் கொண்டே ஓடினார், உடனே ஃபரினா வெளியே வந்து பார்த்த போது ஒரு நபரை கொலை செய்ய நான்கு மர்ம நபர்கள் துரத்திக்கொண்டு வந்தனர்.
27.07.2012
பிரபஞ்சன் தன் தந்தையின் மரணத்தை பற்றியே நினைத்து நினைத்து அழுது கொண்டு இருந்தான், யாரிடமும் பேசாமல் இருந்தான்.
30.07.2012
இரண்டு நாட்களுக்கு பிறகு தனது கல்லூரிக்கு சென்றார், அங்கிருந்த அனைவரும் தனது அனுதாபங்களை பிரபஞ்சனிடம் தெரிவித்தனர். அப்போது ரோஷ்னி பிரபஞ்சனிடம் ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தாள் அப்போது....
நேரம் - 1.10
அந்த நபர் ஃபரினாவிடம் உதவி கேட்டான்,ஃபரினா அந்த நபரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள், உடனே அவன் கையை பிடித்துக் கொண்டு வேகமாக ஓடினாள். மசூதிக்கு பின்புறம் மறைவதற்கு இடம் இருந்தது, அந்த இடத்திற்கு இரண்டு பேரும் சென்றனர், அப்போதுதான் அந்த நபரிடம் ஏன் அவர்கள் உங்களை கொல்ல நினைக்கிறார்கள் நீங்கள் யார் என்று ஃபரினா அந்த நபரிடம் கேட்டாள். என் பெயர் கார்த்தி, நான் ஒரு பத்திரிகையாளர் என்று கூறினார், தனக்கு நடந்த சம்பவங்களை ஃபரினா-விடம் கூறினார்.
நான் உங்களை காப்பாற்றுகிறேன் என்று ஃபரினா கார்த்தியிடம் கூறினாள்...