Chereads / இரு உயிர் / Chapter 6 - الريح السادسة

Chapter 6 - الريح السادسة

என் முன்னால் காதலியின் பெயர் ஃபரினா என்று பிரபஞ்சன் கூறினான். அவளின் புகைப்படம் நான் பார்க்க வேண்டும் என்று தர்ஷினி கூறினாள். ஃபரினாவின் புகைப்படத்தை காண்பித்த பிறகு தனக்கு ஏற்பட்ட முதல் காதலை சொல்ல ஆரம்பித்தான்.

பிரபஞ்சனும் ஃபரினாவும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்தனர் இருவரின் குடும்பமும் ஒன்று இணைந்து ஒரே குடும்பம் போல் நன்றாக பழகி வந்தனர். சில காலம் கழித்து இருவரும் வேறொரு பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். இருவரின் படிப்பும் காதலும் வளர்ந்து கொண்டே வந்தது. சில நாட்கள் கழித்து இருவரும் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தனர். இருவரும் அருகில் இருந்த ஒரு பூங்காவிற்கு சென்றனர், அங்கு சென்ற பிறகு தன் காதலை வெளிப்படுத்தலாம் என்று பிரபஞ்சன் நினைத்தான்.‌ பூங்காவிற்கு சென்ற பிறகு இருவரும் சாதாரணமாக பேச ஆரம்பித்தனர், அப்போது ஃபரினா அவளின் ஞாபகார்த்தமாக அவளின் பெயர் பொறித்த கயிற்றை கையில் கட்டி விட்டாள். இருவரும் தன் காதலை பற்றி கூற‌ தொடங்கும் போது ஃபரினாவின் அம்மா தொலைபேசியில் அழைத்தார்கள். அப்போது தனது பாட்டி இறந்து விட்டதாக அம்மா கூறியதாக பிரபஞ்சனிடம் ஃபரினா கூறினாள், உடனே ஊருக்கு செல்ல வேண்டும் அதனால் நான் கிளம்புகிறேன் என்று கூறி விட்டு உடனே அங்கிருந்து கிளம்பினாள் ஃபரினா.

காதலை வெளிப்படுத்த முயலாமல் இருவரும் சென்றனர்.

மூன்று நாட்கள் கழித்து ஃபரினா பிரபஞ்சனை தொடர்பு கொண்டு நான் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று கூறினாள். அந்த நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தான் பிரபஞ்சன்.

சில நாட்கள் கழித்து...

ஃபரினா வருவாள் என்று வாசலில் காத்துக் கொண்டிருந்தான் ஆனால் ஃபரினாவிற்கு பதிலாக அவளின் அம்மா வீட்டிற்கு வந்தாள். 

ஃபரினாவின் அம்மா கூறியது...

ஃபரினாவும் என் தம்பியும் இரு தினங்களுக்கு முன்பே ஊரில் இருந்து புறப்பட்டனர் ஆனால் வரும் வழியில் இவர்கள் வந்த வாகனம் பேருந்தில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நேற்றுதான் எங்களுக்கு இதை பற்றி தெரிய வந்தது, இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று பிரபஞ்சனிடம் ஃபரினாவின் அம்மா கூறினாள்.

இதை கேட்டதும் பிரபஞ்சனின் உள்ளம் நடுங்கி அழுக ஆரம்பித்தான், தன் காதலை வெளிப்படுத்த முயலாமல் போன இந்த வாழ்க்கை வேண்டாம் என்று அவன் நினைத்தான், அப்போது தான் அவன் வாழ்க்கையில் ரோஷ்னி வந்தாள்.

ஃபரினாவின் நினைவுகள்....

அந்த விபத்தின் போது நான் சாலையில் இருந்து சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டேன் , எனக்கு தலையில் பலமாக காயம் ஏற்பட்டது. அங்கிருந்த சிலர் என்னை வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏழு வருடம் சிகிச்சைக்கு பிறகு நான் என் சொந்த ஊருக்கு சென்றேன் அப்போது என்னுடைய படத்திற்கு மாலை அணிந்திருந்தது அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது, நான் விபத்தில் இறந்ததாக அனைவரும் நம்பிக்கொண்டு இருந்தனர், அதை பொய் என்று அனைவருக்கும் உணர்த்தினேன்.

பிரபஞ்சனும் நான் இறந்து விட்டதாகதான் நினைத்திருப்பார் அதனால் உடனே அவனை சந்திக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். மசூதியில் தொழுது விட்டு அவனை பார்க்க செல்லாம் என்று நான் நினைத்தேன். நான் தொழுது கொண்டிருந்த போதுதான் கார்த்தி என்னை காப்பாற்றுங்கள் என்று என்னிடம் வந்து உதவி கேட்டான்.