ஃபரினா என்ற பெயர் கேட்டதும் பிறகு பிரபஞ்சனின் கருவிழிகள் விரிந்தது... ஆனால் அவள் என் ஃபரினாவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரபஞ்சனுக்கு தெரியும் ஆனால் கார்த்தி சொன்ன சில தகவல்கள் பிரபஞ்சனுக்கு சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியது அதனால் அவளைப் பார்க்க வேண்டும் என்று கார்த்தியிடம் கூறினான் பிரபஞ்சன்.
தர்ஷினியும் ஃபரினாவின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு பிரபஞ்சனை பார்க்க வந்து கொண்டிருந்தாள்.
ஃபரினாவிற்கு மயக்கம் தெளிந்ததும் ராஜன் அடைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைத்தாள்.
ஃபரினா இருந்த அறையில் சிறிதாக ஜன்னல் கதவு இருந்தது, உடனே அந்த வழியாக தப்பிக்க முயன்றாள் , ஜன்னல் கண்ணாடியை உடைத்து விட்டு மேலே ஏறினாள் , அப்போது ஏதோ சத்தம் கேட்கிறது என்று நினைத்து ராஜன் அந்த அறைக்குள் சென்றான் அப்போது ஃபரினா தப்பித்துக் கொண்டிருந்தாள் உடனே ஃபரினாவின் கையை பிடித்து இழுத்தான் , ஆனாலும் அவள் தப்பித்து விட்டாள். உடனே ராஜன் அவளை கொல்ல ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஓடினான்.
ஃபரினாவின் வீடு எனக்கு தெரியும் என்று கார்த்தி கூறியதும் உடனே பிரபஞ்சன் உடனடியாக அவள் வீட்டுக்கு கார்த்தியை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
ஃபரினா உயிரை காப்பாற்றிக் கொள்ள வேகமாக ஓடிக் கொண்டிருந்ததாள் , ராஜன் அவளை கொல்ல துரத்திக்கொண்டு இருந்தான்.
ஃபரினா ஒரு குடிசைக்குள் ஒழிந்து கொண்டாள்.
பிரபஞ்சன் கார்த்தியை கூட்டிக்கொண்டு சாலையில் நடந்து சென்றான். பிரபஞ்சன் எங்கோ செல்வதை பார்த்த தர்ஷனி அவனை பின் தொடர்ந்து சென்றாள்.
சிறிது நேரம் கழித்து ஃபரினா அங்கிருந்து தப்பிக்க முயன்ற போது ராஜனின் அடியால் ஒருவன் பார்த்துவிட்டான் உடனே அவர்கள் ஃபரினாவை துரத்திக்கொண்டு ஓடினர்.
பிரபஞ்சன் கார்த்தியுடன் சென்று கொண்டிருந்த போது, சில நபர்கள் ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு ஓடியதை பார்த்தான். வேகமாக அவர்களை பின்தொடர்ந்து பார்த்த போது அது ஃபரினா என்று கார்த்தி கூறினார். உடனே அவர்களை பிரபஞ்சன் துரத்திச் சென்றான்.
கார்த்தி உடனே காவல்துறைக்கு தகவல் தந்தான்.
ஃபரினா அருகில் இருந்த தேவாலயத்தில் ஒழிந்து கொண்டாள், ராஜன் அவளை தேடிக்கொண்டு அந்த பகுதி முழுவதும் சுற்றினான். யாருக்கும் தெரியாமல் தேவாலயத்தின் பின் வாசல் வழியே பிரபஞ்சன் உள்ளே நுழைந்து ஃபரினா இருக்கும் இடத்திற்கு சென்றான்.
ஃபரினா யேசுவின் சிலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு இருந்தாள், அப்போது அங்கு வந்த பிரபஞ்சன், ஃபரினாவை பார்த்ததும் கண்கலங்கி நின்றான். ஐந்து வருடங்களுக்கு முன் இறந்ததாக கூறப்பட்டு வந்த தனது காதலியை நேரில் பார்த்த பிரபஞ்சனும், இனி நம் காதலனை பார்க்கவே மாட்டோம் என்று நினைத்த ஃபரினாவும் , நேரில் சந்தித்துக் கொண்ட இருவரும் மெய்மறந்து நின்றனர்.
இருவரும் அன்பை பரிமாறிக் கொண்ட பின், ஃபரினா தனக்கு என்ன நடந்தது என்றும், ராஜனிற்கு ஏன் என்னை கொல்ல நினைக்கிறான் என்பதையும் பிரபஞ்சனிடம் கூறினாள். இதனை அறிந்த பிறகு அவளை தப்பிக்க வைக்க பிரபஞ்சன் திட்டம் போட்டான். கார்த்தியை தொடர்பு கொண்டு ஏதோ ஒரு இருசக்கர வாகனத்தை வெடிக்க வைத்து ராஜனையும் அவரது கூட்டாளிகளையும் திசை திருப்ப கட்டளையிட்டான்.
அவன் சொல்லியபடி செய்த போது சில நபர்கள் மட்டும் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது வெளியே வந்த பிரபஞ்சனும் ஃபரினாவும் ஓடத் தொடங்கினர், அப்போது அதை பார்த்த ராஜன் அவர்களை துரத்தினான் , தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தான்.
தர்ஷினி அந்த இடத்திற்கு வந்துவிட்டாள் , ராஜன் துப்பாக்கியை எடுத்ததை பார்த்த தர்ஷனி, உடனே அவனை தடுக்க முயன்றாள் அப்போது அவளை வேகமாக தள்ளிவிட்டதால் அருகில் இருந்த இரும்பு கம்பியில் மோதியதால் அவள் மயக்கமடைந்தாள் .
பிரபஞ்சனும் ஃபரினாவும் மீண்டும் தேவாலயத்தின் உள்ளே ஓடினார்கள் அப்போது ராஜன் துப்பாக்கியால் ஃபரினாவை காலில் சுட்டான், அதே இடத்தில் ஃபரினா சுருண்டு விழுந்தாள். பிரபஞ்சன் அதிர்ச்சி அடைந்தான், உடனே அவனை தடுக்க நினைத்தான், அப்போது ராஜன் மீண்டும் ஃபரினாவின் தோல் பட்டையில் சுட்டான், அதில் அவள் மயக்கமடைந்தாள். பிரபஞ்சன் ராஜனை கொல்ல ஓடி வந்ததான், மீண்டும் ஃபரினாவின் தலைக்கு குறி வைத்தான் ராஜன்.
அந்த நேரம் காவல்துறையும் அந்த இடத்திற்கு வந்தது, உடனே அவர்கள் ராஜனை தடுக்க ஓடினார்கள். அப்போது ராஜன் ஃபரினாவை நோக்கி சுட்டான் அப்போது இடையில் பாய்ந்த கார்த்தியின் தலைக்குள் குண்டு பாய்ந்தது. காவல்துறை ராஜனை உடனடியாக கைது செய்தது. கார்த்தியால் பிரிந்த ஒரு காதல், கார்த்தியால் ஒன்று சேர்ந்தது.
கார்த்தி இறந்து விட்டான்...
சில நாட்கள் காவியாவின் வழக்கு நடந்தது, பல முக்கிய ஆதாரங்களை ராஜனுக்கு எதிராக ஃபரினா தயார் செய்தால் அதனால் இவ்வழக்கு மிகப் பெரிய வழக்காக பார்க்கப்பட்டது.
நீதிமன்றம் ராஜனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் அவன் தம்பிக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பு அனைவராளும் வரவேற்கப்பட்டது. இத்தீர்ப்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று நின்றது,
காவல் அதிகாரிகள் தர்ஷினி- ஃபரினாவையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஃபரினாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறினார். இச்சம்பவம் அனைத்தும் நொடி பொழுதில் நடந்து முடிந்து விட்டது.
இறந்ததாக நினைத்த பிரபஞ்சன் - ஃபரினாவின் காதல் தேவாலயத்தில் ஒன்று சேர்ந்தது...
காவியாவிற்கு அரசு முறைப்படி இறுதிச் சடங்கு நடந்தது, இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்பதால் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது ஆனால் இது போன்ற பல காவியாக்கள் இன்று வரை சீரழிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...
நன்றி...