கார்த்தி அந்த சம்பவத்திற்கு பிறகு மன நிம்மதியை இழந்தான் அதனால் அவன் நண்பர்கள் அவனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர சுற்றுலா செல்லலாம் என்று நினைத்தார்கள்.
கார்த்தியும் அவன் நண்பர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடைக்கானல் செல்லலாம் என்று திட்டம் போட்டனர், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
ஃபரினா அருகில் இருந்த காவல்நிலையம் சென்று சாட்சி சொல்ல வந்த பெண்ணை கடத்தி விட்டார்கள் உடனே அவளை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதாள்.
பல சித்திரவதைகளை சந்தித்த பெண் சற்றும் தளர்ந்து போகாமல் உன் தம்பிக்கு எதிராக சாட்சி சொல்லுவேன் என்று தைரியமாக ராஜனிடம் கூறினாள், அவனை பார்த்து பயப்படாமல் இப்படி கூறியதால் ஆத்திரம் அடைந்த ராஜன் அந்த பெண்ணின் நாக்கை வெட்டி எடுத்துவிட்டான்.
பிரபஞ்சன் ரோஷ்னியுடன் துணி கடைக்கு சென்று கல்யாணத்திற்கு புடவை எடுத்துக் கொண்டு இருந்தனர். அப்போது ரோஷ்னிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது, உடனே அருகில் வைத்திருந்த தண்ணீரை முகத்தில் தெளிந்தான் ஆனால் கண் முழிக்க வில்லை.
அந்த பெண் ரத்த வெல்லத்தில் மயங்கி கிடந்தாள், ராஜன் அந்த பெண்ணை ஒரு அறையில் வைத்து புட்டி விட்டான், சிறிது நேரம் உயிருக்கு போராடி கொண்டு இருந்த அந்த பெண் ரத்தம் அதிகமாக வெளியே சென்றதால் மெல்ல மெல்ல அவளின் உயிர் பிரிந்தது.
ஃபரினா காவல்துறையிடம் புகார் அளித்ததை ராஜனின் நண்பர் பார்த்து விட்டார், உடனே அந்த விஷயத்தை ராஜனிடம் கூறினார். ஃபரினாவை கொன்றால் தான் இதற்கு ஒரு முடிவு வரும் அதனால் அவளை இங்கு அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார் . அப்படி வர மறுத்தால் அங்கேயே அவளின் தலையை வெட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
ரோஷ்னியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார், இவளுக்கு ஒன்றும் இல்லை, காலையில் உணவு உண்ணாமல் இருந்ததே மயக்கத்திற்கு காரணம் என்று மருத்துவர் கூறினார்.
கார்த்தி நண்பர்களுடன் சுற்றுலா செல்வதால் தேவையான பொருட்களும் துணிகளும் வாங்க பிரபஞ்சன் சென்ற அதே துணி கடைக்கு சென்றான்.
மருத்துவரை பார்த்த பிறகு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்போதுதான் ரோஷ்னிக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது, தான் வைத்திருந்த கைப்பையை துணி கடையில் மறந்து வைத்து விட்டதை உணர்ந்தாள், அதில் நிறைய பணம் இருக்கிறது அதனால் உடனே அதை எடுக்க வேண்டும் என்று பிரபஞ்சனிடம் கூறினாள். உடனே துணி கடைக்கு இருவரும் சென்றனர். மூன்றாம் மாடியில்தான் பணப்பை இருக்கும் என்று ரோஷ்னிக்கு தெரியும் அதனால் அதை எடுக்க சென்றாள். அந்த பணப்பை பத்திரமாக அங்கு வேலை செய்த மேலாளர் எடுத்து வைத்திருந்தார்.
பணப்பையை எடுத்துக் கொண்டு (LIFT)-ல் வந்து கொண்டு இருந்தாள் அப்போது அதில் ஏதோ கோளாறு ஏற்பட்டு மெதுவாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள், பிரபஞ்சன் முதல் வெளியே வந்தார் பிறகு ரோஷ்னி வெளியே வரும்போது திடீரென LIfT-ன் கதவு மூடியது. ரோஷ்னியின் முடி சிக்கியது, வலி தாங்க முடியாமல் கத்தினாள்.
அந்த நேரத்தில் துணி வாங்க வந்த கார்த்தி நான்காம் மாடியில் இருந்து கொண்டு கீழே செல்ல LIFT BUTTON-னை அழுத்தினான், அப்போது கீழே இருந்த LIFT மேலே சென்றது , அதில் அவளின் முகம் உள்ளே இழுக்கப்பட்டு ரோஷ்னியின் தலை , முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
பிறகு தீயணைப்பு வீரர்கள் மூலம் அவளின் உடலை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அதில் எந்த பயனும் இல்லை என்று பிரபஞ்சனுக்கு தெரியவந்தது. கலகலப்பாக நடந்திருக வேண்டிய திருமணம் ஆனால் இரு வீட்டாரின் கதறல்களோடு இறுதிச் சடங்கு நடந்தது.