சில நாட்கள் கழித்து....
பிரபஞ்சன் அன்று நடந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் ஒவ்வொரு நிமிடமும் மனதளவில் புண்பட்டு அழுது கொண்டே இருந்தான். தர்ஷினியும் அடிக்கடி வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறுவாள்.
ஃபரினாவை கடத்திச் சென்ற ராஜனின் ஆட்கள், அந்த பெண்ணை கொலை செய்த அதே இடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு ராஜன் ஃபரினாவை கொல்ல வெறியோடு காத்துக் கொண்டு இருந்தான். பிறகு அவளை அடித்து சித்திரவதை செய்து தான் தம்பி மீது குடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு இந்த ஊரை விட்டு போக சொன்னார்.
ரோஷ்னி இறந்த சோகத்தால் பிரபஞ்சன் போதைப் பழகத்திற்கு ஆளானார். தர்ஷினி எவ்வளவு சொல்லியும் அவன் கேட்க வில்லை, ஒரு நாள் சோகம் தாங்க முடியாமல் மாடியில் இருந்து குதிக்க பார்த்தான் அப்போது எதார்த்தமாக அங்கு வந்த தர்ஷினி பிரபஞ்சனை காப்பாற்றி பத்திரமாக வீட்டுக்கு அழைத்து சென்றாள்.
ஒரு நாள் தர்ஷினி தோழி வீட்டிற்கு சென்றாள் அப்போது அவளின் தோழி தான் சுற்றுலா சென்ற போது எடுத்த புகைப்படங்களை தர்ஷினியிடம் காண்பித்தாள் அப்போது ஒரு ஆச்சரியமும் அதிசயத்தையும் பார்த்தாள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கூறப்பட்ட பிரபஞ்சனின் முன்னாள் காதலி ஃபரினாவின் முகம் அந்த புகைப்படத்தில் ஒரு ஓரத்தில் இருந்தது. தர்ஷினி அதிர்ந்து போய் இந்த புகைப்படம் எங்கு எடுத்தது என்று தன் தோழியிடம் கேட்டாள், அதற்கு அவள் காவேரி ஆற்றங்கரைக்கு அருகில் தான் எடுத்துக் கொண்டோம் என்று அவள் கூறினாள்.
ரோஷ்னியின் இறப்பு கார்த்திக்கும் மனவேதனையை உண்டாக்கியது, அதனால் பிரபஞ்சனிடம் நேரில் சென்று மன்னிப்பு கோரியும் ஆறுதல் கூறிவிட்டு வரலாம் என்று நினைத்தான். கார்த்தி பிரபஞ்சனுக்கு ஆறுதல் கூற அவன் வீட்டுக்கு சென்றார், பிரபஞ்சனை பார்த்தும் கார்த்தி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். நான் தெரியாமல் அந்த பட்டனை அழுத்தி விட்டேன் அதனால்தான் உங்கள் காதலி இறந்த விட்டாள், ஐந்து நிமிடம் தாமதமாக அழுத்திருந்தால் அவள் இறந்திருக்க மாட்டாள்,என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார்.
ராஜன் அடித்ததில் ஃபரினா மயக்கம் அடைந்தாள், சில நேரம் கழித்து ஒரு அறையின் கதவு ஓரத்தில் இருந்து ரத்தம் வழிந்து வந்து மயங்கி கிடந்த ஃபரினாவின் முகத்தில் படர்ந்தது. மயக்கத்தில் இருந்து விழித்த ஃபரினா, ரத்தம் வந்துகொண்டிருந்த பாதையை நோக்கி சென்று பார்த்தால் அங்கு காவியா இறந்து கிடந்தாள்.
தர்ஷினி தான் பார்த்த புரியாத புதிரை பிரபஞ்சனிடம் காண்பிக்க புறப்பட்டாள்.
கார்த்தி: நான் எப்போதோ இறந்திருந்தால் இன்று உங்கள் காதலி உயிரோடு இருந்திருக்கலாம்.
பிரபஞ்சன்: ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
கார்த்தி: எனக்கும் ராஜன் என்ற ஒரு நபருக்கும் பல நாட்களாக பிரச்சினை நடந்து வருகின்றது, சில நாட்கள் முன்பு அவர் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார் ஆனால் அதிஷ்டவசமாக ஒரு பெண் என்னை காப்பாற்றி பத்திரமாக அனுப்பி வைத்தாள்.
பிரபஞ்சன்: இதற்கும் ரோஷ்னி இறந்ததற்கும் என்ன சம்பந்தம்?
கார்த்தி: அன்று அந்த பெண் என்னை காப்பாற்றாமல் இருந்திருந்தால் நான் உங்களுடன் இப்படி பேசிக்கொண்டு இருந்திருக்க மாட்டேன், உங்கள் காதலி உயிரோடு இருந்திருப்பாள்.
பிரபஞ்சன் : ரோஷ்னியின் விதி முடிந்து விட்டது, அவளின் இறப்பிற்கு யாரும் பொறுப்பாக முடியாது, அமாம், யார் அந்த பெண்? இவ்வளவு பெரிய உதவியை செய்திருக்கிறாள் என்றால் உண்மையிலேயே அவளுக்கு நல்ல மனம் தான். அவள் பெயர் என்ன?
கார்த்தி: என் உயிரை காப்பாற்றிய பெண்ணின் பெயர் ஃபரினா...
இதை கேட்டதும் பிரபஞ்சன் அதிர்ச்சி அடைந்தான், ஐந்து வருடங்களுக்கு முன் இறந்ததாக கூறப்பட்டு வந்த தனது காதலியின் பெயரை கேட்டதும் குழப்பத்தின் உச்சியில் இருந்தான்.