03.08.2012
அந்த கயிற்றை பார்த்ததும் பழைய நினைவுகள் இருவருக்கும் வந்தது.
மறுநாள் காலையில் பிரபஞ்சன் ஃபரினா பற்றியே யோசித்து கொண்டு இருந்தான், அப்போது தர்ஷினி பிரபஞ்சனிடம் என்ன நடந்தது? ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டாள். ஒன்றுமில்லை என்று பிரபஞ்சன் சமாளித்து விட்டான்
கார்த்தி ஃபரினாவிடம் ராஜனை பற்றிய அனைத்து தகவல்களும் கூறினார், அதை பற்றியே சிறிது நேரம் ஃபரினா யோசித்து கொண்டு இருந்தாள். காவல்துறையிடம் புகார் அளிக்காமல் போனால் கார்த்தி இறந்து விடுவார் அதே சமயத்தில் தன் உயிருக்கு உயிராக நேசித்த பிரபஞ்சன் பற்றிய தகவல்கள் தேட வேண்டும், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாள் ஃபரினா.
பிரபஞ்சன் தனக்கு நடந்ததை தர்ஷினியிடம் கூறியதால் மிகவும் வருத்தமாக இருந்தாள், நான் உனக்கு நிச்சயமாக உதவியாக இருப்பேன் என்று ஆறுதல் கூறினாள்.
ஃபரினா கார்த்தியை முதலில் காப்பாற்றுவோம் என்று தனக்குள்ளே நினைத்து கொண்டாள். முதலில் இதைப்பற்றி காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என்று நினைத்தாள், அதனால் உனக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது வீட்டில் பதுங்கிக் கொல் என்று ஃபரினா கார்த்தியிடம் கூறினாள்.
தன் நண்பனின் வீட்டில் கார்த்தி யாருக்கும் தெரியாமல் இருந்தான் அப்போது நண்பனின் தொலைபேசிக்கு கார்த்தியின் தந்தை அழைத்தார் அதில் நான் ராஜன் ,நீ இருக்கும் இடம் எனக்கு தெரியும், உன் தந்தையை நான் கடத்தி வைத்திருக்கிறேன் உடனே நீ என் இடத்திற்கு வரவேண்டும் என்று கூறினார்.
தர்ஷினி பிரபஞ்சன் சொன்னதை ரோஷ்னியிடம் பகிர்ந்து கொண்டாள், அந்த நிகழ்வுகளை கேட்டதும் பிரபஞ்சன் மீது தீராத பாசம் ஏற்பட்டது. ரோஷ்னி, தான் எங்கு சென்றாலும் கூடவே பிரபஞ்சனையும் அழைத்து செல்வாள். இருவர்களின் உறவும் சற்று நெருக்கமாக வர தொடங்கியது.
கார்த்தி ராஜன் இருக்கும் இடத்திற்கு சென்றான் அப்போது அங்கு அவன் தந்தையை கயிற்றால் கட்டி வைத்திருந்தனர். அங்கு சென்றதும் ராஜன் ஃபரினா குடுத்த புகாரை வாபஸ் பெற சொல் இல்லையெனில் உன் தந்தை இறந்து விடுவார் என்று மிரட்டினார். உடனே கார்த்தி தொலைபேசியில் புகாரை வாபஸ் பெற்றுக் கொள் என்று ஃபரினாவிடம் கூறினார், வேறு வழி தெரியாமல் ஃபரினாவும் ஒப்புக்கொண்டாள்.
அந்த பிரச்சினை ஒரு வழியாக முடிவிற்கு வந்தது ஆனால் ஃபரினா ராஜனை எப்படியாவது சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று வெறியோடு காத்துக் கொண்டு இருந்தாள். கார்த்தி ஃபரினாவிடம் தனக்கு உதவி செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டு தன் தந்தையை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து சென்றார்.