சில நாட்கள் கழித்து....
ஒரு நாள் இரவில் ராஜனின் தம்பி மது அருந்திவிட்டு அவன் நண்பர்களுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தான் அப்போது ஒரு பெண் அந்த வழியாக சென்று கொண்டிருந்தாள், அவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றனர், அந்த பெண் சுதாரித்துக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள், அந்த நபர்கள் அவளை துரத்த ஆரம்பித்தனர்.
அதே இரவில் பிரபஞ்சனும் ரோஷ்னியும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள், இவர்கள் இருவரும் நாளுக்கு நாள் நெருங்கி பழக ஆரம்பித்தார்கள், ஃபரினா இல்லாத குறையை தெரியாமல் பார்த்துக் கொண்டாள் ரோஷ்னி.
அந்த பெண் ஒரு புதருக்குள் ஒழிந்து கொண்டாள். அந்த நபர்கள் அவளை தேடிக்கொண்டு அந்த புதர் செடி அருகில் வந்தனர் , அப்போது அந்த பெண்ணின் அம்மா அவள் தொலைபேசிக்கு அழைத்தார், தொலைபேசி சத்தம் கேட்டதும் அந்த நபர்கள் அவளை பிடித்து கொண்டனர். அவளை அடித்து கொடுமை படுத்தி, அவளின் துணியை வைத்தே அவளின் வாயை அடைத்து விட்டு அந்த நான்கு நபர்களும் அதே புதருக்குள் வைத்து கற்பழித்தனர் . பிறகு கைரேகை அழிப்பதற்காக ஒரு கத்தியை எடுத்து அந்த பெண்ணின் முகத்திலும் உடம்பு முழுவதும் காயப்படுத்தினார்கள். அதன்பிறகு அவர்கள் மது போதையில் தள்ளாடிக் கொண்டே அங்கிருந்து சென்றனர்.
அதே இரவில்..
ராஜன் ஜோசியம் பார்ப்பதற்காக ஜோசியர் வீட்டிற்கு சென்றார். அவர் நீங்கள் இருக்கும் வீட்டில் இனி மேல் இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து அதனால் அந்த வீட்டில் இருக்காதீர்கள் என்று எச்சரித்தார். அதனால் தான் வீட்டிற்கு அருகில் இருந்த இடத்தை வாங்கி பெரிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தார். வீட்டிற்கு வந்தவுடன் அந்த நிலத்தின் உரிமையாளர் வீட்டிற்கு சென்று அந்த இடத்தை கேட்டார் ஆனால் அவர் தர மறுத்து விட்டார், ஆத்திரம் அடைந்த ராஜன் அந்த முதியவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டார் .
அந்த பெண் சில நேரம் கழித்து நினைவிற்கு வந்தது. தட்டுத் தடு மாறி நடந்து சென்றாள். செல்லும் வழியில் யாராவதிடம் உதவி கேட்டு வீட்டிற்கு சென்று விடலாம் என்று நினைத்தாள்.