ஃபரினா , வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள், அப்போது அவளுக்கு கெட்ட கனவு வந்தது உடனே தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டாள். தண்ணீர் குடிக்க கீழே இறங்கி வந்தாள், அப்போது வெளியே நாய் குறைப்பது போல் ஒரு சத்தம் கேட்டது, வெளியே வந்து பார்த்தால் ஒரு பெண் மயங்கி கிடந்தாள், உடனே ஃபரினா அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றாள் ஆனால் நினைவு வரவில்லை, உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். அப்போது ஒரு மருத்துவர் அவள் நிலைமையை பரிசோதனை செய்த மருத்துவர் , அவளை யாரோ சில நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர், உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருக்கிறாள் என்று கூறினார்.
பிரபஞ்சனும் ரோஷ்னியும் தன் காதலை பற்றி பெற்றோருடன் கலந்து பேசினார்கள் ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
இரண்டு நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பியது. அதிஷ்டவசமாக உயிர் தப்பினாள் என்று மருத்துவர் ஃபரினாவிடம் கூறினார்கள். உன் பெயர் என்ன என்று ஃபரினா கேட்டாள் அதற்கு அவள் என் பெயர் காவியா, நான் ஒரு அநாதைப் பெண், நான் நேற்று முன்தினம் இரவு தனியாக நடந்து வந்து கொண்டு இருந்தேன் அப்போது என்னை சில நபர்கள்... என்று தனக்கு நடந்த கொடுமையை கூறத் தொடங்கினாள்.
ராஜன் தன் தம்பியிடம் பயங்கரமாக சண்டை போட்டான். போதையில் தவறு செய்து விட்டோம் என்று அவர் தம்பி கூறினான். அந்த பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று தனது ஆட்களிடம் கூறினார். உடனே ராஜன் தன் தம்பியை எதோ ஒரு ஊருக்கு அனுப்பி வைத்தார்.
பிரபஞ்சன் ரோஷ்னியின் பெற்றோருடனும் , ரோஷ்னி பிரபஞ்சனின் பெற்றோருடனும் காதலை பற்றி பேசினார்கள். முதலில் அவர்களின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது, பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியாக இருவரின் பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
தனக்கு நடந்த கொடுமைகளை ஃபரினாவிடம் கூறினாள் அந்த பெண். ஃபரினா அந்த நாய்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும் என்று வெறியோடு இருந்தாள். காவல்துறையிடம் முதலில் புகார் அளித்தாள், ஐந்து நாட்களுக்கு பிறகு அந்த சம்பவத்தை செய்தது ராஜனின் தம்பி என்று உளவுத்துறை மூலமாக காவல்துறைக் தெரியவந்தது. ஃபரினா வழக்கு தொடர்ந்தாள் ஆனால் ராஜன் தன் தம்பியை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரவில்லை அதனால் சில நாட்கள் கழித்து நீதிமன்றம் பிடிவாரண்ட் விதித்தது, ராஜனின் தம்பிக்கு எதிராக சாட்சி சொல்ல யாருமே முன் வரவில்லை ஃபரினாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
தீர்ப்பு வழங்கும் நாள் வந்தது, ஃபரினா வேறு வழி இல்லாமல் அந்த பெண்ணிற்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்பதால் கற்பழிக்கப்பட்ட அதே பெண்ணை சாட்சிக்கு அழைத்து செல்ல முடிவெடுத்தாள். நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ராஜன் வழிமறித்து அந்த காவியாவை கடத்தி சென்றார், ஃபரினாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் கடத்திச் சென்ற பிறகு சாட்சி சொல்ல கூடாது என்று காவியாவை மிரட்டினார் ஆனால் அவள் கேட்க வில்லை. அருகில் இருந்த கம்பியை சூடாக்கி அவளின் கண்களில் வைத்தான் அதில் அவளின் கதறல் சத்தம் கட்டிடம் முழுவதும் எதிரொலித்தது. மேலும் அந்த பெண்ணை சித்திரவதை செய்ய தொடங்கினான் அதன்பிறகு பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்தான்.
பெற்றோர்களின் சம்மதத்துடன் கல்யாணத்துக்கான வேலைகளை தொடங்க ஆரம்பித்தனர் பிரபஞ்சனும் ரோஷ்னியும். கல்யாணத்திற்காக துணி எடுக்க ஒரு பெரிய ஜவுளி கடைக்கு சென்றனர், ரோஷ்னிக்கு ஏதோ ஒரு விஷயம் சரியாக படவில்லை அவ்வப்போது மயக்கம் வருவது போல் உணர்ந்தாள்.
பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து காவியாவின் கழுத்தில் வைத்து சாட்சி சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என்று ராஜன் மிரட்டினார்.