Chereads / இரு உயிர் / Chapter 5 - البحر الخامس

Chapter 5 - البحر الخامس

பிரபஞ்சன் கல்லூரி வகுப்பில் அமைதியாக ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தான் அப்போது அங்கு வந்த தர்ஷினி பிரபஞ்சனிடம் ஆறுதலாக பேசிக் கொண்டு இருந்தாள் , வேதனை தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்தான் பிரபஞ்சன் .

ஃபரினா கார்த்தியை காப்பாற்ற ஒரு திட்டம் போட்டாள், சிறிது நேரம் கழித்து அவர்கள் இருவரும் ஒழிந்து கொண்டு இருந்த இடத்தை அடியாட்கள் கண்டுபிடித்து விட்டார்கள், உடனே ஃபரினா அருகில் இருந்த காவேரி ஆற்றில் கார்த்தியை பிடித்து தள்ளி விட்டு, காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்திகொண்டே இருந்தாள் உடனே அங்கிருந்த மூன்று காவல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு வந்து ஃபரினாவுடன் சேர்ந்து கார்த்தியை காப்பாற்றினார்கள். காவல்துறை அதிகாரிகளை பார்த்ததும் துரத்திக்கொண்டு வந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தர்ஷினி அப்போதுதான் ஒன்றை கவனித்தாள், பிரபஞ்சன் தனது உயிர் போல் காத்து வந்த கையில் கட்டியிருந்த கயிறு காணவில்லை என்று தர்ஷினிக்கு தெரிய வந்தது. உன் கையில் இருந்த கயிறு எங்கே என்று தர்ஷினி பிரபஞ்சனிடம் கேட்டாள்.

ஃபரினா ஆற்றில் இருந்து மேலே ஏறும் போது ஏதோ ஒரு பொருள் காலில் குத்தியது, அது என்ன வென்று பார்க்க ஆற்றுக்குள் கைகளை நுழைத்தாள்.

கயிற்றை காணவில்லை என்று தெரிந்ததும் பதறிப் போனான் பிரபஞ்சன்.

காலில் குத்திய பொருளை பார்த்த போது ஃபரினா அதிர்ந்து போனாள், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தன் காதலனுக்காக ஆசையாக வாங்கி குடுத்த ஃபரினா என்ற பெயர் பொறித்த கயிறு எப்படி இந்த ஆற்றில் இருக்கிறது என்று புரியாமல் நின்றாள் ஃபரினா.

தர்ஷினி அந்த கயிற்றில் இருக்கும் ரகசியம் எனக்கு தெரிய வேண்டும் என்று கூறினாள் , பிரபஞ்சன் அவன் கையில் கட்டியிருந்த கயிற்றுக்கு பின்னால் இருக்கும் மறக்க முடியாத நினைவுகளை கண்களை மூடி கூறத் தொடங்கினார்.

ஃபரினாவும் அந்த கயிற்றுக்கு பின்னால் இருக்கும் மறக்க முடியாத நினைவுகளை கண்களை மூடி நினைத்து பார்க்க தொடங்கினாள்.