29.07.2012
கார்த்தி தன் தந்தையை அழைத்து வர தனது நான்கு சக்கர வாகனத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் பயணித்து கொண்டிருந்தார், அப்போது நடுவழியில் வாகனம் நிலை தடுமாறி நின்றது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான் கார்த்தி. அந்த இடமே அமைதியாக இருந்தது, அந்த காடு முழுவதும் ஏதோ ஒரு விநோதமான ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. சிறிது தூரம் நடந்து சென்று யாராவது உதவிக்கு இருக்கிறார்களா என்று பார்த்தான், அப்போது யாரோ சில நபர்கள் சந்தன மரங்களை கடத்திச் சென்று திருட்டு தனமாக விற்பனை செய்ததை பார்த்தான். உடனே தன் தொலைபேசியில் அந்த நபர்களை படம் பிடித்தார், அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நபர் கார்த்தியை பார்த்து விட்டார் உடனே கார்த்தி அங்கிருந்து தப்பித்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்றார். அதன்பின் சமூக வலைதளத்தில் தான் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்தார்.
ராஜனின் நண்பன் வேக வேகமாக ஓடி வந்து நாம் அரசாங்கத்திற்கு தெரியாமல் கடத்தி வந்த சந்தன மரங்களை ஒரு பத்திரிகையாளர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார் அதனால் அவனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த நண்பர் ராஜனிடம் கூறினார். அவனை பற்றிய தகவல்கள் அனைத்தும் எனக்கு தெரிய வேண்டும் என்று கூறினார்.
27.07.2012
பிரபஞ்சன் தன் தந்தையின் அஸ்தியை கரைக்க காவேரி ஆற்றங்கரைக்கு சென்றான், தனது தந்தையின் அஸ்தியை நல்ல முறையில் பூஜை செய்து காவேரி ஆற்றில் கரைத்துக் கொண்டு இருந்தான் அப்போது பிரபஞ்சனின் கையில் கட்டியிருந்த கயிறு அவிழ்த்து தண்ணீரில் விழுந்து மண்ணில் புதைந்தது, ஆனால் அந்த கயிற்றை அவன் கவனிக்க வில்லை, அஸ்தியை கரைந்ததும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.....