பெற்றோர்களை இழந்த யாழினி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொண்டாள், அடிக்கடி கோவம் வந்து தன்னை தானே அடித்துக் கொல்வாள். ஒரு நாள் தனது வாகனத்தில் எங்கு செல்கிறோம் என்று கூட தெரியாமல் பைத்தியம் போல் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு ஆறுதல் சொல்லவும் அவளை பார்த்துக் கொள்ளவும் யாரும் இல்லை அதனால் அவள் மிகுந்த மனவேதனை அடைந்தாள். ஒரு நாள் கடலில் தற்கொலை செய்ய முயன்றாள் ஆனால் அங்கு இருந்தவர்கள் அவளைக் காப்பாற்றினர்.
ஆறு மாதங்கள் கழிந்தது.....
யாழினி ஒரு சிறிய மருந்தகம் நிலையத்தில் வேலை பார்த்து வந்தாள், அவள் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது அவளின் பெற்றோர் அந்த வீட்டில் இருந்தனர், அதை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தாள். உடனே அவள் அம்மாவை கட்டிப்பிடித்து அழுதாள் அப்போது திடீரென அவளின் அப்பாவிற்கு வாயில் இருந்து ரத்தம் வந்தது அதே நேரத்தில் அம்மாவிற்கு 'கை' தானாக உடைந்து தொங்கியது, பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தாள்.
அந்த நேரத்தில் கண்முழிக்கிறாள் , அவள் கண்டது கனவு.
சில நாட்கள் கழித்து இவளுக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பது போல் கனவுகள் வந்தது, இவளின் நிலைமை மிகவும் மோசமடைந்தது.
சில நாட்கள் கழித்து அவளுக்கு பைத்தியம் பிடித்து எங்கோ ஓடி விட்டாள் என்று யாழினி வீட்டின் அருகில் இருக்கும் சில நபர்கள் பேசிக்கொண்டனர் ஆனால் உண்மையில் அவள் எங்கு சென்றாள் எப்படி சென்றாள் என்று யாருக்கும் தெரியவில்லை.
.....