Chereads / எது நிஜம்? / Chapter 20 - நிழல் 5

Chapter 20 - நிழல் 5

யாழினியை பாதுகாப்பாக சக்கரவர்த்தி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார். யாழினி தான் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டதால் நீதிபதி அவருக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் உடனே யாழினி நீதிபதி அளித்த தண்டனையை ஏற்க மறுத்து எனக்கு மரணதண்டனை தான் வேண்டும் என்று கேட்டாள். யாழினி அழுதபடி எனக்கு இனி வாழ பிடிக்கவில்லை என்றும் என் கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள் என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டாள் , யாழினியின் கடைசி ஆசைப்படி நீதிபதி அவளுக்கு மரணதண்டனை விதித்தார்.

இரண்டு நாட்கள் பிறகு யாழினிக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தது, அதிகாலையில் தான் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பதால் யாழினி தூக்கு மேடைக்கு அருகில் சென்றாள். அப்போது மேடைக்கு ஏறும் சமயத்தில் ஒரு நபரை பார்த்தாள், அவரை பார்த்ததும் மீண்டும் வெறி பிடித்தது போல் நடந்து கொண்டு கண்கள் முழுவதும் சிவந்து விட்டது, பக்கத்தில் இருந்த ஒரு கூர்மையான பொருளை எடுத்து அந்த நபரை அந்த இடத்திலேயே குத்திக் கொன்றாள். அங்கு வந்தவர் மதன், அவர் அங்கு தான் கைதிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். தண்டனை நிறைவேற்றும் போது மருத்துவர் அருகில் இருப்பது அவசியம் அதன் காரணமாக தான் மதன் அங்கு வந்தார் இதை பார்த்த யாழினி கோவம் தாங்க முடியாமல் அவரை குத்திக் கொன்றாள்.

இந்த தகவல் சக்கரவர்த்திக்கு சென்றது அவர் பதறியடித்து ஓடி வந்து பார்த்தார் அப்போது அங்கு ஒருவரும் இல்லை சக்கரவர்த்தி குழப்பம் அடைந்தார். உடனே அங்கு இருந்த அதிகாரிகளை கேட்கும் போது யாழினி என்கிற பெயரில் கைதியே இல்லை, யாருக்கும் தண்டனையும் விதிக்கப்படவில்லை என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி உடனே தான் அலுவலகத்திற்கு சென்று யாழினியின் ஆதாரங்களை தேடி பார்த்தார் அங்கும் சேகரித்து வைத்திருந்த ஆதாரம் எதுவுமே இல்லை இப்போது சக்கரவர்த்தி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொண்டார். மற்ற அதிகாரியிடம் கேட்கும் போது யாழினி யார் என்றே தெரியாது என்று அனைத்து அதிகாரங்களும் கூறுகின்றனர். அனைத்தும் காணாமல் போக போக போக போக பைத்தியம் பிடித்தது போல் தலை சுத்தி சுத்தி சுத்தி சக்கரவர்த்தி மாடியில் இருந்து கீழே குதித்தார்.

ஏதோ ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது, அந்த சத்தம் அதிகம் ஆகிறது.

உடனே கண் விழித்தாள்...

இவ்வளவு நேரம் சத்தம் கேட்டது கடிகாரத்தில் இருந்து கேட்ட சத்தம், அந்த கடிகாரத்தை ஒரு பெண் நிறுத்தி விட்டு படுக்கையில் இருந்து எழுந்தாள். அவள் பெயர் 'நந்தினி'. அப்போது ஒரு அழைப்பு வந்தது அதில் அவளின் அம்மா வேலைக்கு செல்லையா என்று கேட்டார் அதற்கு நந்தினி இன்னும் சில நேரத்தில் புறப்பட்டு செல்கிறேன் என்று கூறி விட்டு, அவள் ஒரு குற்றங்களை சேகரிக்கும் பத்திரிகையாளர், அலுவலகத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்றாள்.

நந்தினி வேலைக்கு செல்லும் ஒரு சாதாரண பெண், இக்கதை நந்தினியின் வாழ்க்கையில் ஒரு நாள் கனவில் நடந்த சம்பவங்கள் தான் இக்கதாபாத்திரங்களும் இந்த கதையும்.

"இதுதான் நிஜம்"