ஐந்து கொலைக்கு பிறகு...
சக்கரவர்த்தி யாழினியை தேடுவதில் மும்முரமாக ஈடுபட்டார். காட்டில் இருந்து எடுத்த பெட்டியில் ஒரு கை ரேகை இருந்தது. அதே கை ரேகை பல இடங்களில் கிடைத்தது அதனால் ஒருவேளை இது யாழினியின் கை ரேகையாக இருக்கலாம் என்று சந்தேகப் பட்டனர். அப்போது தொலைபேசியில் அழைப்பு வந்தது அதில் நான் யாழினி பேசுகிறேன் நான் காவல் துறையிடம் சரணடைய வேண்டும் என்று விரும்புகிறேன் அதனால் என்னை வந்து கைது செய்து கொள்ளுங்கள் என்று அவள் கூறினாள். சக்கரவர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை உடனே சரி நீ எங்கு இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு யாழினி, நான் இருக்கும் இடத்தை ஏற்கனவே உங்களுக்கு சொல்லி விட்டேன் என்று கூறினாள். அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை அப்போது தான் ஞாபகம் வந்தது ஐந்து பேர் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட வரைபடங்கள் அனைத்தையும் ஒன்று சேர்ந்தால் இவளின் இருக்குமிடம் தெரியவந்தது. யாழினி அவரிடம் நீங்கள் அந்த வரைபடத்தை அதில் இருக்கும் எண்கள் படி ஒன்று சேர்ந்தால் நான் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.
யாழினி சொன்னபடி ஐந்து உடம்பிலிருந்து எடுத்த காகிதத்தை அதன் வரிசை படி ஒன்றாக இணைத்தார். காகிதத்தின் இறுதியில் (கீழ், மேல்) என்று இருந்தது அதன் படி சரியாக அந்த வரைபடத்தை ஒன்றினைத்தார் . எந்த இடத்தில் இருந்து இந்த வரைபடத்தை தொடங்குவது என்று தெரியவில்லை கடைசியாக ஐந்து பேரும் காணாமல் போன காட்டில் இருந்தே இந்த வரைபடத்தை தொடங்கலாம் என்று திட்டமிட்டார். அதன் பின் அந்த வரைபடத்தை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார், வெகு தூரம் சென்று கொண்டிருந்தார் கடைசியாக ஒரு ஆற்றுக்கு அருகில் வீடு ஒன்று இருந்தது, அதன் அருகில் மெதுவாக சக்கரவர்த்தி மற்றும் சில காவல் அதிகாரிகள் சென்றனர். அனைவரையும் தயார் படுத்திக் கொண்டு வேகமாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார், யாழினி எந்த வித பதற்றமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். ஐந்து நிமிடம் காத்திருங்கள் நான் சாப்பிட பிறகு வருகிறேன் என்று கூறினாள். சக்கரவர்த்தி துப்பாக்கியுடன் அவள் வரும் வரை காத்துக் கொண்டு இருந்து சிறிது நேரம் கழித்து அவள் தானாக வெளியே வந்து என்னை கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறினாள் உடனே சக்கரவர்த்தி யாழினியை கையில் விலங்கு மாட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கதையின் ஆட்டம் ஆரம்பம்...