Chereads / எது நிஜம்? / Chapter 16 - நிழல் 1

Chapter 16 - நிழல் 1

சக்கரவர்த்தி யாழினியை காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறையில் உட்கார வைத்து விசாரணை செய்ய தொடங்கினர்.

முதலில் யார் நீ? ஏன் இந்த கொலைகளை செய்தாய் என்று சக்கரவர்த்தி கேட்டார் அதற்கு யாழினி தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி பொறுமையாக கூறத் தொடங்கினாள். அவளையும் அவளின் குடும்பத்தையும் பற்றி முதலில் கூறினாள் அதன் பிறகு அந்த கடையில் என்ன நடந்தது என்று கூறினாள், சிகிச்சை பலனின்றி அவளின் பெற்றோர்களை இழந்ததை கூறினாள். அதற்கு சக்கரவர்த்தி இதற்கும் அந்த ஐந்து நபர்களுக்கும் என்ன சம்பந்தம் அதேபோல் கல்லூரி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கும் என்ன சம்பந்தம், நீ எப்படி அந்த இடத்திற்கு வந்தாய்? நீ தான் அந்த பெண்ணை கொலை செய்ததா? என்று கேட்டார்.

எனக்கும் அந்த கல்லூரி பெண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் அந்த பெண்ணுக்கும் எனக்கு உள்ள ஒரே தொடர்பு அந்த ஐந்து நபர்கள் தான் என்று கூறினாள்.

(உரையாடல்கள்)

சக்கரவர்த்தி : சரி அது இருக்கட்டும் இப்போது ஏன் நீயாகவே எங்களிடம் வந்து சரணடைந்தாய் ?

யாழினி : எனக்கு நாட்கள் ஆக ஆக பைத்தியம் பிடித்தது போல் நடக்க ஆரம்பித்தது. சில அமானுஷ்ய சம்பவங்கள் என் கனவில் வரும் அதனால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அதனால் தான் நான் சரணடைய திட்டம் போட்டேன்.

சக்கரவர்த்தி : உனக்கு எந்த மாதிரியான கனவு வந்தது?

யாழினி : நிறைய நாட்கள் எனக்கு அமானுஷ்ய கனவுகள் வந்தது.

சக்கரவர்த்தி : உனக்கு நடந்த அதே‌ சம்பவங்கள் தான் அந்த ஐந்து நபர்களுக்கும் நடந்தது, அவர்களுக்கும் அதேபோல் தான் அமானுஷ்ய கனவுகள் வந்தது.

யாழினி : உண்மையாகவா ? சரி அவர்களுக்கு எந்த மாதிரியான கனவுகள் வந்தது? அதில் என்ன நடந்தது என்று தெரியுமா?

சக்கரவர்த்தி : கார்த்தியின் கனவில் எதோ ஒரு பெண் தகராறு பட்டதாகவும் , சதீஷ் கனவில் நான்கு சக்கர வாகனம் அவர் மீது இடிக்க வந்தது என்றும் அவர்கள் கூறினர்.

யாழினி : அவர்கள் சரியாக தான் உங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சக்கரவர்த்தி : நீ கொலை செய்த மூன்று பேரும் அதே மாதிரி தான் சொன்னார்கள். அது எப்படி நான் கேட்ட அதே கேள்வியை நீயும் கேட்டாய்?

யாழினி : அதற்கு காரணம் நீங்கள் விசாரிக்கும் முறை தவறு என்று கூறுவதற்கு தான் நானும் அதே கேள்வியை கேட்டேன்.

சக்கரவர்த்தி : புரியவில்லை.

யாழினி: அவர்கள் சொன்னது அனைத்தும் பொய்யானவை அவர்கள் கனவில் நடந்தது என்று கூறியது தான் உண்மையாக நடந்தது. அவர்கள் செய்த தவறு என் வாழ்க்கையை மாற்றியது.

பொறுமையாக சொல்கிறேன் கேளுங்கள்...