யாழினி அவளின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை கூற தொடங்கினாள்....
எங்களின் வாழ்க்கையும் நாட்களும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நிம்மதியாக போனது, என் பெற்றோர்களுக்கு நான் ஒரே மகள் . ஒரு நாள் என் தந்தை ஒரு நாய்க்குட்டியை எடுத்து வந்து என் கையில் குடுத்தார் அந்த நாய் எனக்கு மிகவும் பிடித்தது, அதை நான் வளர்க்க தொடங்கினேன். சில நாட்கள் கழித்து நானும் என் நாய்க்குட்டியும் பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றிருந்தோம் அப்போது என் வீட்டுக்கு ஒரு பெட்டி அஞ்சல் மூலம் வந்தது, என் தந்தைக்கு இது என்ன பெட்டி? எங்கு இருந்து வந்தது என்று தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து அவர் அந்த பெட்டியை திறந்து பார்க்க சென்றார் அப்போது திறக்கும் போது திடீரென ஒரு வெடிகுண்டு வெடித்தது. அந்த சத்தம் கேட்டதும் நான் பதறியபடி ஓடி வந்து பார்த்தேன் அந்த வெடி வெடித்தால் அதிலிருந்து புகை வரும், அந்த புகை கண்ணில் பட்டால் கண் பார்வை இழந்து விடும். அதேபோல் என் பெற்றோர்கள் இருவருக்கும் கண்கள் போனது இதனால் சில காலம் அவர்கள் மருத்துவமனையில் இருந்தனர். யார் அந்த பெட்டியை அனுப்பியது எதற்காக என் பெற்றோர்களை கொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
சில காலம் கழித்து.....
அவர்கள் ஐந்து பேரும் கனவு என்று சொன்னது பொய், அவர்கள் சொன்னது அனைத்தும் உண்மையாக நடந்தது. இந்த திட்டம் முத்துராமனை கொல்ல தான் இவர்கள் இப்படி ஒரு நாடகத்தை நடத்தினர்.
ஒரு நாள் முத்துராமன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திடீரென ஒரு பெண் வாகனத்தின் முன்பு குதிக்க பார்த்தாள் உடனே முத்துராமன் வாகனத்தை இடதுபுறம் திருப்பி விட்டார் ஆனால் அவருக்கு அது தெரியாது இவரை கொல்ல தான் அவர் செல்லும் வழியை மாற்றிவிட்டனர் என்று. முத்துராமன் செல்லும் போது எதிரே வந்த வாகனம் இவரை இடிக்க வந்தது உடனே வலது பக்கம் திரும்பி விட்டார், அதுவும் அந்த ஐந்து நபர்களின் திட்டம் தான்.
அப்போது தான் ஆதித்தன் சாலையில் நின்றுகொண்டிருந்தார் அதை பார்த்த முத்துராமன் உதவி வேண்டுமா என்று கேட்டார் அதற்கு ஆதித்தன் என்னை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனையில் இறக்கிவிட வேண்டும் என்று கேட்டார் அதனால் முத்துராமனின் வாகனத்தில் ஏறினார் அப்போது தான் முத்துராமன் வசமாக மாட்டிக் கொண்டார். அவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார், அந்த ஐந்து நபர்களும் அங்கு வந்தனர்.
அப்போது.....