Chereads / எது நிஜம்? / Chapter 19 - நிழல் 4

Chapter 19 - நிழல் 4

யாழினி : முத்துராமனை கொலை செய்ததை என் பெற்றோர்கள் மட்டும் பார்க்கவில்லை அந்த கல்லூரி பெண்ணின் பெற்றோர்களும் பார்த்தனர் ஆனால் அங்கு அவர்கள் உடனே தப்பித்து விட்டனர் அதனால் அந்த ஐந்து நபர்கள் அந்த பெண்ணின் பெற்றோர்களை கொல்ல தேடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது நான் அவர்களை காப்பாற்றி என் இடத்தில் வைத்தேன் ஆனால் அவர்கள் அங்கும் வந்துவிட்டனர், தப்பித்து செல்லும் போது கல்லூரி மாணவியின் பெற்றோர்கள் மீது அந்த ஐந்து பேர் வாகனத்தை ஏற்றி கொன்று விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றாள், அப்போது தான் அவளை தடுத்து நிறுத்தி எழில் , ராஜா, ஆதித்தன் ஆகிய மூவரும் அந்த பெண்ணை கொன்று அதை தற்கொலையாக மாற்றிவிட்டனர். என்னால் அந்த கொலையை தடுக்க முடியவில்லை அதனால் நான் அந்த மூன்று பேரையும் கடத்தி கொன்று விட்டேன்.

சக்கரவர்த்தி : சரி, உனக்கு பைத்தியம் பிடித்தது உண்மை தானே ? அப்போது அந்த நாட்களில் நீ எங்கு இருந்தாய் எங்கு சென்றாய்?

யாழினி : எனக்கு பைத்தியம் பிடித்தது உண்மை தான் ஆனால் எனக்கு பைத்தியம் பிடிக்க வைத்தவர் ஒரு நபர் அதுவும் அந்த ஐந்து நபர்களின் இன்னோரு நண்பர்.

அவர் பெயர் மதன், அவர் தான்அந்த ஆறாவது நபர்...

என் பெற்றோர்கள் இறந்த பிறகு சில நாட்கள் கழித்து நானும் என் நாய்க்குட்டியும் சாலையில் இரவு நேரத்தில் நடந்து சென்றோம் அப்போது என் பக்கத்தில் வந்த ஒரு வாகனம் என்னை கடத்திச் சென்றது. அதன் பிறகு என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர் , அந்த இடத்தில் ஒரு மருத்துவர் புதிய மருந்துகளை பரிசோதனை செய்து வந்தார். என்னை கடத்திச் சென்று ஏதோ ஒரு மருந்தை எனக்குள் செலுத்தினார் அதன்பிறகு என்னை என் வீட்டில் கொண்டுவந்து விட்டனர். சில காலம் கழித்து எனக்கு ஏதோ ஒன்று நடக்க ஆரம்பித்தது அடிக்கடி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்வேன்,ஆறு மாதங்கள் கழித்து தான் எனக்கு அந்த நோய் குணமடைந்தது.

சக்கரவர்த்தி : அப்போ அந்த புத்தகத்தில் இருந்த‌ சில நபர்கள் உன் தந்தையின் கழுத்தில் சுடப்பட்ட விஷயங்கள் எப்ப நடந்தது?

யாழினி : அது உங்களை ஏமாற்றுவதற்காக நானே உருவாக்கிய கதை. ஆனால் இந்த நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு கஷ்டப் பட்டேன் அதனால் தான் நான் சரணடைய நினைத்தேன்.

அனைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்து விட்டு சக்கரவர்த்தி நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுவிடலாம் என்று நினைத்தார் அதேபோல் அனைத்து விசாரணையும் முடிந்த பிறகு நீதிமன்றங்களுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது.....