Chereads / எது நிஜம்? / Chapter 18 - நிழல் 3

Chapter 18 - நிழல் 3

முத்துராமனை கொல்ல ஒரு குறுகிய சாலைக்கு அழைத்து சென்றனர் அதன் பிறகு சிறிது நேரம் அவரிடம் ஏதோ முக்கியமாக பேசிக்கொண்டிருந்தார்கள் அதன் பிறகு அவரை கொல்ல திட்டம் போட்டனர். அந்த நேரத்தில் தான் நானும் என் பெற்றோர்களும் அந்த சாலைக்கு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றோம். என் அப்பா அம்மாவை என் வாகனத்தில் இருக்க சொல்லிவிட்டு நான் கடைக்குளே சென்றேன், முதலில் சதீஷ் கார்க் கண்ணாடிகளை உடல்தான், முத்துராமனை அடித்து கொடுமை செய்தார்கள் அதன்பிறகு ஐந்து பேரும் முத்துராமனை சுடத் தொடங்கினர் அதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால் அனைத்து தடயங்களையும் அழித்தனர். அப்போது என் பெற்றோர்கள் சத்தம் கேட்டதால் இடதுபுறம் திரும்பியபடி பார்த்துக் கொண்டு இருந்தனர் அதை நோட்டமிட்ட அந்த ஐந்து நபர்கள் என் பெற்றோர்களையும் கொல்ல திட்டம் போட்டனர். அவர்களுக்கு கண் தெரியாது என்பது ஐந்து நபர்களுக்கு தெரியாது அவர்கள் தூரத்தில் இருந்தே என் பெற்றோர்களை கொன்று விட்டனர்.

அவர்களை பிடிக்க நான் ஓடி வந்தேன் ஆனால் அவர்கள் தப்பித்து விட்டனர். அவர்களை கொல்லவேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது அதனால் அவர்களை பின்தொடர்ந்து கடத்தி கொலை செய்தேன் என்று யாழினி கூறினாள்.

சக்கரவர்த்தி : அப்போது முத்துராமனுக்கு ஏற்பட்ட அமானுஷ்ய சம்பவங்கள்? புதைத்த இடத்தில் முத்துராமனின் உடல் இல்லை அது எப்படி நீ இருந்த காட்டிற்குள் வந்தது?

யாழினி : அதையும் நான் தான் செய்தேன் என் பெற்றோர்களுக்கு நியாயம் கிடைக்காத வரைக்கும் அந்த உடம்பு புதைந்து போக விடக்கூடாது என்று திட்டம் போட்டேன் அதனால் அந்த உடம்பை எடுத்து வந்து நான் இருந்த காட்டுக்குள் வைத்தேன். ஐந்து பேரும் இறந்த பிறகு தான் உங்களுக்கும் அந்த உடம்பு கிடைத்தது.

சக்கரவர்த்தி : அப்போது அமானுஷ்ய சம்பவங்கள்?

யாழினி : அது எல்லாமே அந்த ஐந்து நபர்கள் நடத்திய நாடகம். அவர்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால் அந்த நாடகத்தை நடத்தினர். அவர்களுக்கு நடந்தது என்று கூறிய அனைத்தும் எனக்கு நடந்தது சம்பவங்கள் தான், அதை தான் அவர்கள் மாற்றி சொன்னார்கள்.

சக்கரவர்த்தி : அப்போது கல்லூரியில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கும் உனக்கும் அந்த ஐந்து நபர்களுக்கும் என்ன சம்பந்தம்?

யாழினி : அவர்கள் சொன்னதில் எழில் சொன்னது மட்டும் தான் உண்மை. எங்கள் மூன்று நபர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

...