இவ்வளவு கொடூர கொலைகளை செய்தது ஒரு பெண் என்று தெரிந்தது சக்கரவர்த்தி மிரண்டு போனார் அதன்பின் அந்த பதிவை கேட்க தொடங்கினர். அதன் பிறகு தான் அவருக்கு தெரிய வந்தது அந்த மூன்று பேரும் கார்த்தியின் நண்பர்கள் என்றும் மொத்தமாக ஐந்து நபர்களை அந்த பெண் கொலை செய்திருக்கிறாள் என்று அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. காவல் துறை சதீஷ் மற்றும் கார்த்தியிடம் கேட்ட கேள்வியை அந்த பெண்ணும் அந்த மூன்று நபர்களிடம் கேட்டாள். யாழினி முதலில் கேள்வி கேட்ட நபரின் பெயர் ராஜா. அவர் , எனக்கும் முத்துராமனின் கொலைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் கொலை நடந்த போது நான் இந்த ஊரிலேயே இல்லை என்று கூறினார், அமானுஷ்யம் பற்றி கேட்கும் போது அவரும் எனக்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடந்தது, கனவில் நான் என் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது யாரோ ஒருவர் என்னை கொல்ல வந்தது போல் கனவுகள் வந்தது என்று கூறினார். நான்காம் நபரிடம் யாழினி அதே கேள்வியை கேட்டாள் அந்த நபரின் பெயர் எழில். அவர் முத்துராமனின் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் எனக்கு கனவுகள் எதுவும் வந்தது இல்லை ஆனால் நான் ஒரு சாலை விபத்து ஏற்படுத்தி உள்ளேன் அதில் ஒரு குடும்பம் இறந்தது என்று கூறினார். மூன்றாம் நபரிடம் யாழினி கேள்வி கேட்டாள் அந்த நபரின் பெயர் ஆதித்தன். அவருக்கும் அந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார் அவருக்கு ஒரு கனவு வந்தது அதில் ஒரு நான்கு சக்கர வாகனம் என் மீது இடிக்க வந்தது அதேபோல் பல அமானுஷ்ய விஷயங்களும் என் வாழ்க்கையில் நடந்தது ஆனால் எனக்கு அதில் இருந்து தீர்வு கிடைக்கவில்லை என்று ஆதித்தன் கூறினார். மூன்று நபர்களிடமும் யாழினி விசாரணை செய்ததில் அவளுக்கு எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை அந்த கோபத்தில் அந்த மூன்று பேரையும் ரத்தம் தெறிக்க வெட்டி கொன்று விட்டாள். இதை அனைத்தையும் அந்த கருவி மூலம் கேட்டுக் கொண்டிருந்த சக்கரவர்த்திக்கு சிறிதளவு கூட ஒன்றும் புரியவில்லை யார் அந்த நபர்கள் ஏன் நான் கேட்ட அதே கேள்வியை கேட்டாள் எதனால் அவள் அந்த நபர்களை கொன்றாள் என்று ஒன்றும் புரியவில்லை.
.....