அந்த பெட்டிக்குள் பிணங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது அதை உடனே சக்கரவர்த்தி வெளியே கொண்டு வந்தார் அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூன்று நபர்களின் தலையும் வெட்டப்பட்டு அதே பெட்டிக்குள் இருந்தது அதனால் யாருடைய உடம்பு எந்த தலையுடன் சேரும் என்று அதிகாரிக்கு தெரியவில்லை அதனால் அந்த உடம்பில் (டி.என்.ஏ )வும் எடுத்து பரிசோதனை செய்ய உத்தரவிட்டார் சக்கரவர்த்தி. அதன் பின் அந்த பெட்டியில் ஏதேனும் ஆதாரம் இருக்கலாம் என்று நினைத்து நன்றாக சோதனை செய்ய சொன்னார். அதில் குரல் பதிவு செய்யும் வசதியோடு ஒரு பெட்டி அதன் உள்ளே இருந்தது, அதை சோதனை செய்ய சக்கரவர்த்தி கையில் எடுத்தார் அந்த நேரம் மருத்துவர் பதறியபடி வந்து சக்கரவர்த்தியை பிணவறைக்கு அழைத்து சென்றார் அப்போது கார்த்தி உடம்பில் ஏற்பட்ட அதே காயங்கள் மற்ற மூவரின் உடம்பில் இருந்தது,அதேபோல் அவர்களின் வயிற்றில் அதே மாதிரி இரும்பு பெட்டியும் சாவியும் இருந்தது அதை திறந்து பார்த்தார். முதலில் ஒரு பிணம் இருந்தது அதில் இருந்த பெட்டிக்குள் காகிதம் இருந்தது அதில் சாலை வழிகள் இருந்தது அந்த காகிதத்தின் இறுதியில் (கீழ் - 4) என்று இருந்தது. அடுத்த பிணத்தில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தார் அதிலும் சாலை வழிகள் இருந்தது அதே போல் காகிதத்தின் இறுதியில் (கீழ்-3) என்று இருந்தது. அதே மாதிரி மூன்றாவது பிணத்தில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தார் அதிலும் சாலை வழிகள் இருந்தது காகிதத்தின் இறுதியில் (மேல்-5) என்று இருந்தது, இதை பார்த்தும் சக்கரவர்த்தி குழப்பம் அடைந்தார் அப்போது அவருக்கு ஒன்று ஞாபகம் வந்தது , குரல் பதிவு செய்யும் கருவியில் எதாவது ஆதாரம் இருக்கலாம் என்று நினைத்து அவர் அந்த பெட்டியை வாங்கினார். அந்த பதிவின் ஆரம்பத்திலேயே அவருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் இருந்தது. அந்த பதிவில் பேசியது ஒரு பெண், பெண்ணின் குரல் கேட்டு அவர் மிரண்டு போனார். என் பெயர் யாழினி என்றும் நான் தான் இந்த கொலைகளை செய்து பெட்டியில் வைத்தேன் என்று அதில் அவள் கூறினாள்.
அதன்பிறகு.....