மண்ணுக்குள் புதைந்திருந்த கதவு திறந்ததும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் , சக்கரவர்த்தி உள்ளே சென்று பார்க்கலாம் என்று மற்ற அதிகாரியிடம் கூறினார். நான்கு காவல் அதிகாரிகள் அந்த இடத்திற்குள் சென்றனர் அங்கு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது, உள்ளே நுழைந்ததும் ஒரு குகை போன்ற இடம் இருந்தது அப்போது அங்கு ஒரு இரும்பு தகடு இருந்தது அதில் 'வழியை கீழ் இருந்து மேலே பின்பற்றவும்' என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது அப்போது தான் அந்த அதிகாரிக்கு ஞாபகம் வந்தது கார்த்தி வயிற்றில் இருந்து எடுத்த காகிதத்தில் (1 'கீழ்') என்றும் சதீஷ் (2 'மேல்') என்று இறுதியில் இருந்ததை அவருக்கு ஞாபகம் வந்தது. அதனால் அதே வழியில் அவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். இரண்டு கி.மீ அளவுக்கு உள்ளேஅந்த வழிகள் இருந்தது . அந்த வரைபடம் முடியும் போது ஏதேனும் ஒரு தடயம் கிடைக்கலாம் என்று நினைத்து சக்கரவர்த்தி ஒரு ஆச்சரியத்துடன் உள்ளே நுழைந்து கொண்டே இருந்தார். வரைபடம் ஒரு கட்டத்தில் முடிந்தது அந்த அதிகாரிகளுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை அதன்பிறகு செல்ல அங்கு வழிகளும் இல்லை அதனால் அவர்கள் அங்கேயே நின்றனர். அந்த இடம் முழுவதும் அழுகிய நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது, கடைசியாக அந்த இடத்தில் எதாவது இருக்கிறதா என்று தேடி பார்த்தனர் அப்போது அந்த வாடை அடிக்கும் இடத்திற்கு சென்று பார்த்தனர் அங்கு அவருக்கு பெரும் அதிர்ச்சியை காத்திருந்தது. அங்கு ஒரு மிகப்பெரிய அளவில் ஒரு பெட்டி இருந்தது அதுக்குள் இருந்து தான் அந்த அழுகிய வாடை வந்தது, சக்கரவர்த்தி அதை திறக்க முற்பட்டார் ஆனால் திறக்க முடியவில்லை அப்போது தான் அவருக்கு ஞாபகம் வந்தது. கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கையில் ஒரு சாவி இருந்தது அந்த சாவி இதற்கு பொருந்தும் என்று அவர் கணித்தார் , தான் சட்டை பையில் இருந்த அந்த சாவியை எடுத்து திறக்க சென்றார். அவர் நினைத்தது போலவே அந்த பெட்டி திறந்தது அதன் உள்ளே யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாவதாக ஒரு விஷயம் அங்கு இருந்தது, அந்த இடத்தில் மேலும் மூன்று பிணங்கள் கை, கால், உடம்பு ஆகிய மூன்றையும் துண்டு துண்டாக வெட்டி அந்த பெட்டியில் வைத்திருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார்.
அவர்கள் யார்? யார் இவர்களை கொன்றது? எதற்காக கொன்றனர்? என்று பல கேள்விகள் சக்கரவர்த்தி மனதிற்குள் கேட்டுக் கொண்டே இருந்தது.
...