சக்கரவர்த்தி அந்த காட்டிற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவரின் உதவியாளரிடம் இருந்து அழைப்பு வந்தது அதில் அவர் அந்த காட்டிற்கு மையப் பகுதியில் இருந்து தான் உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது என்று கூறினார். சிறிது நேரம் கழித்து சக்கரவர்த்தி அந்த காட்டிற்கு சென்றனர். அவர் அந்த காட்டில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்ய சொன்னார், சந்தேகப் படும்படி எதாவது பொருட்கள் இருந்தால் உடனே தகவல் அழிக்க சொன்னார். இரண்டு மணிநேரம் அந்த காட்டில் தேடி பார்த்தனர் ஆனால் அங்கு சந்தேகம் படும்படி ஒரு பொருளும் கிடைக்கவில்லை. காட்டின் சில பகுதிகளில் பள்ளம் தோண்டி பார்த்தனர் ஆனாலும் அங்கு ஒரு பொருளும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் சிறிய வேப்பமரத்தில் பழுத்த ஒரு பழம் கீழே கிடந்தது ஒரு காகம் அதை உண்ண நினைத்து அந்த பழத்தை நோட்டம் விட்டது, உடனே அந்த காகம் அந்த பழத்தை உண்ண அருகில் வந்தது. அந்த பழத்தை உண்ண காகம் வாயால் கவ்வியது ஆனால் அந்த பழம் வரவில்லை அதனால் அந்த காகம் பறந்து விட்டது ஆனால் அதன்பின் தான் அங்கு ஒரு தடையம் கிடைத்தது. காகம் அந்த பழத்தை இழுத்தவுடன் அங்கு யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த ஒரு சவப்பெட்டி மண்ணுக்குள் இருந்து வெளியே வந்தது, அதை பார்த்து சக்கரவர்த்தி அதிர்ச்சி அடைந்தார். யாரும் எதிர்பாராத விஷயம் அங்கு இருந்தது அது , முதலில் மர்மமான முறையில் இறந்து கிடந்து காணாமல் போன முத்துராமனின் உடல் அந்த சவப்பெட்டியில் இருந்தது அதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சில காவல் அதிகாரிகள் அந்த சவப்பெட்டியை தூக்கினர் அந்த நேரத்தில் சவப்பெட்டியை தாங்கிக் கொண்டிருந்த ஒரு கருவி மண்ணுக்குள் புதைந்தது அப்போது இடது புறம் நூற்றி ஐம்பது மீட்டர் தள்ளி உள்ள ஒரு புதைந்திருந்த கதவு திறந்தது அதன் உள்ளே இருந்து நிறைய பூச்சிகள் மற்றும் பறவைகள் அங்கு இருந்து தப்பித்து வெளியே வந்தது. சக்கரவர்த்தி அதன் அருகில் சென்று பார்த்தார் அந்த கதவுக்குள் இருள் சூழ்ந்து காணப்பட்டது, அவர் உள்ளே நுழைய தயாராகினார் .
அதன்பின்...