இருவரின் வயிற்றில் இருந்த பெட்டியை திறந்து பார்த்த போது காகிதம் இருந்தது அதில் கார்த்தி மற்றும் சதீஷ் கைப்பட எழுதிய ஒரு தகவல் இருந்தது அந்த இரண்டு காகிதத்திலும் ஏதோ ஒரு இடத்திற்கு செல்ல வழிகள் இருந்தது ஆனால் அந்த வழிகள் பாதியுடன் நிறுத்தப் பட்டிருந்தது. அதிகாரிக்கு இந்த வழி எங்கு செல்லும்? எங்கு இதனுடைய மீது வழிகள் எங்கே ? எங்கிருந்து தொடங்குவது என்று பல கேள்விகள் இருந்தது. அந்த நேரத்தில் கல்லூரி விடுதியில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று செய்தி வந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர் அந்த பெண் அதே கல்லூரியில்(b.com) இரண்டாம் ஆண்டு படித்து வந்ததாகவும் காதல் தோல்வியால் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று அங்கு அந்த பெண்ணின் தோழிகள் கூறினர். அதிகாரி அங்கு ஆய்வு செய்தனர் அப்போது தான் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, இறந்து போன பெண்ணின் கையில் ஒரு சாவி இருந்தது அதுவும் கார்த்தி மற்றும் சதீஷ் வயிற்றில் இருந்த சாவின் அச்சிடப்பட்ட 'ழி' என்ற அதே எழுத்தோடு இருந்ததை கண்டு காவல் அதிகாரிகள் மிரண்டு போனார்கள். அப்போது அந்தக் காவல் அதிகாரிகள் இதை பற்றி சக்கரவர்த்தியிடம் சொல்ல வேகமாக காவல் நிலையம் வந்தனர், அவர்கள் இந்த விஷயத்தை கூறியதும் சக்கரவர்த்தி மிகவும் அதிர்ச்சி அடைந்தார் உடனே அந்த கல்லூரிக்கு சென்று பார்த்த போது அங்கு அந்த சாவி இருந்தது.
அந்த நேரத்தில் அந்த அதிகாரிக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது அதில் சாவி கிடைத்ததா என்று ஒரு குரல் வந்தது அதை கேட்டதும் மிரண்டு போனார் உடனே நீ யார்? ஏன் இந்த கொலைகளை செய்கிறாய்? என்று கேட்டார் அதற்கு அந்த நபர் பதில் அளிக்கவில்லை சாவி கிடைத்ததா என்று மீண்டும் கேட்டார் அதற்கு சக்கரவர்த்தி கிடைத்தது என்று மட்டும் பதில் அளித்தார், உடனே அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. உடனே மேல் அதிகாரிகளிடம் இந்த தகவலை கூறினார் அதன்பின் தான் தொலைபேசிக்கு கடைசியாக வந்த அழைப்பு எங்கு இருந்து வந்தது என்று தேட சொன்னார் அதில் அந்த அழைப்பு கார்த்தி மற்றும் சதீஷ் கடைசியாக சென்று இறந்து போன அதே காட்டில் இருந்து தான் அந்த அழைப்பும் வந்தது என்று அனைவருக்கும் தெரிய வந்தது.
உடனே வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த காட்டிற்கு வேகமாக சென்றனர்.
அதன்பின்...