சக்கரவர்த்தி மருத்துவர் சொன்னதை அப்படியே பதிவு செய்து கொண்டார். இருவரின் நாக்கு பகுதி வெட்டப்பட்ட நிலையில் இருந்தது என்று மருத்துவர் கூறினார். அதன் பிறகு அந்த அதிகாரி வயிற்றில் உள்ள காயம் எதனால் வந்தது என்று கேட்டார் அதற்கு அந்த மருத்துவர் அதிகாரியை தனியாக அறைக்கு அழைத்து சென்று ஒரு பொருளை எடுத்துக் காண்பித்தார். அதில் ஒரு சிறிய இரும்பு பெட்டியும் கூடவே சிறிய சாவியும் இருந்ததை இருவரும் பார்த்தனர். அதேபோல் சதீஷ் உடம்பிலும் வயிற்றுப்பகுதியில் சிறிய இரும்பு பெட்டியும் கூடவே ஒரு சாவியும் இருந்ததை காண்பித்தார் அந்த மருத்துவர். இந்த பொருட்கள் இறந்தவர்களின் வயிற்றில் இருந்ததாகவும், கொலையாளி இவர்களின் வயிற்றைக் கிழித்துக் குடல் பகுதிக்கு அருகில் இருந்ததாகவும் அந்த மருத்துவர் கூறினார். அதுமட்டுமின்றி கார்த்தி மற்றும் சதீஷ் இருவரும் இறந்த பிறகு சில மணி நேரம் கழித்து தான் இவர்களின் வயிற்றைக் கிழித்துக் இந்த பொருட்களை வயிற்றுக்குள் வைத்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
சக்கரவர்த்தி உடனே அந்த பெட்டியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு அந்த பெட்டியை திறக்க தயாராகினார் , முதலில் கார்த்தியின் வயிற்றில் இருந்த பெட்டியை திறக்க அதே வயிற்றில் இருந்த சாவியால் திறக்க முற்பட்டார் ஆனால் அந்த பெட்டியை திறக்க முடியவில்லை. பிறகு சதீஷ் உடம்பில் இருந்த பெட்டியும் சாவியும் எடுத்து வந்து திறக்க முற்பட்டார் ஆனால் அதுவும் திறக்க முடியவில்லை , என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் அந்த அதிகாரி அப்போது ஒரு அழைப்பு வந்தது அதில் ஒரு பெண், தான் படிக்கும் கல்லூரியில் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பாதுகாப்பிற்கு உடனே வரச்சொல்லியும் தொலைபேசியில் அழைப்பு வந்தது அதனால் அங்கு வேலை செய்து வந்த சில காவல் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றனர். சக்கரவர்த்தி காவல் நிலையத்தில் இருந்து கொண்டு அந்த பெட்டியை திறக்கும் வேலையில் மும்முரமாக இருந்தார் , அப்போது தான் ஒரு விஷயத்தை அவர் கவனித்தார் , அந்த சாவியின் ஒரு பகுதியில் 'ழி' என்று பொறிக்கப்பட்டிருந்தது அது இந்த வழக்குக்கு முக்கியமான ஆதாரமாக இருக்கலாம் என்று அவர் கருதினார். அதன் பிறகு அந்த இரண்டு சாவியையும் மாற்றி வைத்து திறக்கலாம் என்று திட்டம் போட்டார், உதாரணமாக கார்த்தியின் வயிற்றில் இருந்த சாவியை சதீஷ் வயிற்றில் இருந்த பெட்டிக்குள்ளும் , சதீஷ் வயிற்றில் இருந்த சாவியை கார்த்தியின் வயிற்றில் இருந்த பெட்டிக்குள்ளும் வைத்து திறக்கலாம் என்று திட்டம் போட்டார்.
அதேபோல் உடனே அந்த பெட்டி திறந்தது, அதன் உள்ளே ஒரு காகிதம் இருந்தது அது நெகிழி போன்ற ஒரு பொருட்களால் சுற்றி வைக்கபட்டிருந்தது இரண்டு பெட்டியிலும் அதே மாதிரி காகிதம் இருந்தது.
அதை திறந்து படிக்க ஆரம்பித்தார் அப்போது...