இருவரின் வீட்டிற்கு சென்ற காவல் அதிகாரிகள் கார்த்தியின் வீட்டில் உள்ள ஒரு அறையில் சுவற்றில் கட்ட பட்ட நிலையில் பிணமாக இருப்பதாகவும் அவரின் முகம் சிதைக்க பட்டு உடம்பு முழுவதும் ரத்த காயங்களுடன் இருக்கிறார் என்று அந்த அதிகாரி கூறினார். உடனே சக்ரவர்த்தி கார்த்தியின் வீட்டிற்கு சென்று பார்த்தார். கார்த்தியின் கையில் கத்தியால் குத்தி ஒரு பக்கம் சதைகளை வெட்டப்பட்ட நிலையிலும், வயிற்றில் ஒரு பெரிய காயம் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அந்த காவல் அதிகாரி. உடனே அவரை பிரேத பரிசோதனைக்கு (postmortem) அனுப்பி வைத்தனர்.
இரண்டாவதாக சதீஷ் இருந்த வீட்டிற்கு சென்று பார்த்தார் , சதீஷும் அவரது வீட்டில் சமையல் அறையில் உள்ள சுவற்றில் கட்ட பட்ட நிலையில் பிணமாக இருந்தார். அவரின் முகமும் சிதைக்க பட்டு முகத்தை கத்தியால் கிழித்தும் உடம்பு முழுவதும் கத்தியால் கீறி, வயிற்றில் ஒரு பெரிய காயம் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இரண்டு பேரும் ஒரே மாதிரியான காயங்களும் அதே மாதிரி சுவற்றில் கட்ட பட்ட நிலையிலும் வயிற்றில் பெரிய காயம் இருப்பதையும் பார்த்து மிரண்டு போனார் சக்கரவர்த்தி. இரண்டு நபர்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சக்கரவர்த்தியை அழைத்து வந்து பிரேத பரிசோதனையில் என்ன விவரங்கள் என்று கூற தொடங்கினர் அந்த மருத்துவர்.
இருவரும் இறப்பதற்கு முன்பு மிகவும் கொடுமை செய்ய பட்டும், ஒரு இரும்பு கம்பியை கூர்மை செய்து இருவரின் உடம்பு முழுவதும் கீறி விட்டு அதே கம்பியால் ஐந்து முறை கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த மருத்துவர் கூறினார்.
அதை விட முக்கியமானது.....