இருவரிடமும் விசாரணை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார் அந்த அதிகாரி. மறுநாள் காலையில் கார்த்தியின் மனைவி காவல் நிலையம் வந்து என் கணவரை காணவில்லை என்றும் அவருக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது அதன்பிறகு அவரது வாகனத்தை எடுத்துக் கொண்டு ஒரு காட்டுப் பகுதிக்குள் சென்றார் என்று கூறினாள் கார்த்தியின் மனைவி.
இரண்டு நிமிடம் கழித்து....
சதீஷ் வீட்டில் வேலை பார்க்கும் நபர் வேகமாக ஓடி வந்து என் முதலாளியை காணவில்லை என்றும் அவருக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது அதன்பிறகு அவரது வாகனத்தை எடுத்துக் கொண்டு ஒரு காட்டுப் பகுதிக்குள் சென்றார் என்று அதே காரணம் கூறினார் , இரண்டு பேரும் எப்படி ஒரே நேரத்தில் அதே காட்டிற்குள் சென்று காணாமல் போவார்கள் என்று அதிகாரிக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே மற்ற அதிகாரியிடம் தெரிவித்தார் அவர்களை ஊர் முழுக்க தேடுவதில் ஈடுபட்டனர் காவல் துறையினர். கணினி மூலம் இருவரின் தொலைபேசி அழைப்புகளையும் பின் தொடர்ந்து பார்த்தனர் அதில் இருவரின் தொலைபேசியும் ஒரு காட்டுப் பகுதிக்குள் சென்ற பிறகு சமிக்ஞை (signal) கிடைக்காமல் போனது தெரிய வந்தது அதனால் முதலில் கார்த்தி மற்றும் சதீஷ் சென்ற காட்டிற்குள் நன்றாக தேடி பார்த்தனர் ஆனால் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.
கார்த்தியின் வாகனம் மூன்று கி.மீ தள்ளி "விழுங்கும் நதி" என்று பெயர் கொண்ட ஒரு சாலையில் நின்றுகொண்டிருந்தது. சதீஷின் கார் அதே சாலையில் சிறிது தூரம் தள்ளி இருந்தது.
அப்போது கார்த்தியின் வீட்டில் சோதனைக்கு சென்ற அதிகாரியிடம் இருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது.
அதில்.....