முத்துராமனின் இரண்டாவது நண்பர் சதீஷ். இவர்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தனர் அதனால் காவல்துறை அவரிடம் விசாரணை செய்ய மறுநாள் காலையில் வீட்டிற்கு சென்றது. அவர் எனக்கும் பல அமானுஷ்ய விஷயங்கள் என் வீட்டில் நடைபெறும் என்றும் என் வீட்டில் உள்ள சில புகைப்படங்கள் காணாமல் போகும் மறுநாள் அது என்னுடைய அறையில் இருக்கும் என்று கூறினார். அதிகாரி இதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் ஆனால் அவர்கள் நம்பவில்லை. சதீஷ் எனக்கு சில கனவுகள் வந்தது என்று கூறினார், அதில் அவர் தனது நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரில் ஒரு வாகனம் வேகமாக வந்து என் மீது இடிக்க வந்தது என்றும் நான் அப்போது இடது புறம் திரும்பி விட்டேன் அந்த வாகனம் வலது பக்கம் திரும்பி விட்டது, உடனே நான் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டேன் , என்று காவல்துறை அதிகாரியிடம் அவர் கூறினார். அதன் பிறகு அதிகாரி சென்று விட்டனர்.
அன்று இரவு சதீஷ் சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்றார், அப்போது தண்ணீர் குழாயை திறந்த போது குழாயில் இருந்து ரத்தம் வந்தது அதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார் உடனே உதவிக்கு வீட்டில் வேலை பார்க்கும் நபரை அழைத்து வந்து பார்த்த போது குழாயில் இருந்து தண்ணீர் வந்தது அதனால் அவருக்கு ஒன்றும் புரியவில்லை, அப்போது தொலைபேசியில் அழைப்பு வந்தது அதில் நீ ஒரு காகிதம் மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு நான் சொல்லும் இடத்திற்கு வா என்று கூறினாள் இல்லையென்றால் உன் நண்பன் கார்த்தி இறந்து விடுவார் என்று மிரட்டினர் அதனால் அவர் தனது வாகனத்தில் அவள் சொல்லும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அவரிடம் வேலை செய்து வந்த நபரும் அவரை பின் தொடர்ந்தார் ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியாததால் அவர் மீண்டும் வந்து விட்டார். சதீஷ், கார்த்தி சென்ற அதே காட்டிற்குள் மெதுவாக சென்று கொண்டிருந்தார் திடீரென அவரின் வாகனம் நின்றது அவருக்கு பின்னால் யாரோ ஒருவர் வந்தார் அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.