மறுநாள் காலையில் முத்துராமனின் கொலைக்கு சந்தேகத்தின் அடிப்படையில் அவரது நபர்களிடம் விசாரணை நடத்தியது காவல்துறை.
முதல் நபர் கார்த்தி, இவர் முத்துராமனின் நண்பர். இவர் எனக்கு சில அமானுஷ்ய விஷயங்கள் பற்றி கூறினார், நான் இரவில் தூங்கும் போது என்னை யாரோ ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்வது போல் சில நினைவுகள் வரும் என்று கூறினார். ஒரு நாள் இவரின் கனவில் ஒரு பெண் இவரை துரத்துவது போன்றும் அந்த பெண்ணை இவர் அடித்து விட்டு ஓடி வந்தது போலவும் கனவுகள் வந்தது என்று காவல்துறை அதிகாரியிடம் கூறினார்.
அன்று இரவு இவருக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது , அதில் நீ ஒரு காகிதம் மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு நான் சொல்லும் இடத்திற்கு வா, என்று கூறினார் அந்த நபர். கார்த்தி வீட்டை விட்டு வெளியே செல்வதை அவர் மனைவி பார்த்துக் கொண்டு இருந்தாள். கார்த்தி தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார், அவர் மனைவி அவரை பின் தொடர்ந்து சென்றாள். அந்த நபர் மீண்டும் கார்த்தியின் தொலைபேசிக்கு அழைத்து அவர் வருவதற்கு வழிகளை கூறிக் கொண்டு இருந்தாள். கார்த்தி ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றார் ஆனால் அவர் மனைவிக்கு இரவில் நன்றாக வாகனம் ஓட்ட தெரியாது அதனால் அவள் தனது வீட்டிற்கு வந்துவிட்டாள். கார்த்தி அந்த காட்டிற்குள் மெதுவாக சென்று கொண்டிருந்தார் திடீரென அவரின் வாகனம் நின்றது அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை பின் புறம் ஒரு உருவம் மெதுவாக அவன் பக்கத்தில் வந்து நின்றது.
அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை....