ஆகாஷ், சரன், ராஜ், சபரி, தர்ஷன் தினேஷ், ஆதவன், புவனேஷ் ஆகியோர் இரவில் சென்றவர்கள் காலையில்தான் வந்தார்கள் அதேபோல் ஸ்வேதா, ஹர்ஷினி, சங்கவி ,சஸ்மிதா, ஆகியோர் தனது இருசக்கர வாகனங்களில் வெளியே சென்றுவிட்டு அவர்களும் அப்போதுதான் வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் ஒன்றாக வீட்டிற்குள் சென்று பார்த்தால் ஐஸ்வர்யா காவியா அஞ்சனா நேஹா ஆகியோர் சடலத்தை பார்த்து அதிர்ந்து போனார்கள்அவர்களுக்கு என்ன நடக்குது என்று புரியாமல் திகைத்துப் போனார்கள் அதன்பின் ஹிபாவை தேடினார்கள் ஆனால் எங்கு சென்றால் என்று கிடைக்கவில்லை தெரியவில்லை ஆனால் வீட்டின் பின்புறம் மட்டும் காலணிகள் இருந்தன அதனால் உடனே அனைவரும் அங்குள்ள காவல் நிலையத்தில் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர் உடனே காவல் அதிகாரியும் வந்து வீட்டை சோதனையிட்டனர் ஆனால் அங்கு எந்தவித தடையும் இல்லை, ஆனால் ஒரு காலணி மட்டும் இருந்தது அது அங்கு உள்ள சந்துருவின் காலணிகள் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து விட்டது அதனால் அவர்கள் சந்துருவை தேடுவதில் மும்முரம் காட்டினார். இவ்வளவு பெரிய துயரம் நடந்து விட்டதால் அனைவரும் சோகத்தில் மூழ்கினர் என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை ஹிபாவை மட்டும் அவர்கள் தேடிக்கொண்டே இருந்தனர் அவல் கிடைத்தால் தான் ஏதேனும் ஒரு விடை கிடைக்கும் என்பதால் அவளை தேடுவதில் தன் நண்பர்கள் மும்முரம் காட்டினார்கள் ஆனால் இங்கு சென்றால் என்று யாருக்கும் தெரியவில்லை. அன்று இரவு அனைவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள் அப்போது ஒரு சத்தம் கேட்டது அதனால் உடனே ஆகாஷ் எழுந்து பார்த்தான் அப்போது ஒருவர் நின்று கொண்டிருந்த மாதிரி இருந்தது உடனே ஆகாஷ் வெளியே வந்து பார்த்தான் அதன்பின் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. காலையில் சக நண்பர்கள் ஆகாஷை காணவில்லை என்பது தெரியவந்தது அனைவரும் அங்கேயும் இங்கேயும் தேடினார்கள் ஆனால் கிடைக்கவில்லை சிறிது தூரம் கடந்து பார்த்த போது ஆகாஷ் இறந்த நிலையில் கிடந்தான் வாயில் ரத்தம் வந்தபடி கழுத்தை நெரித்து கொன்றபடி இருந்தான் ,அவர்கள் உடனே காவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து பார்த்து அதிர்ந்து போனார்கள். அதன் பின் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர் அதனால் காவல் அதிகாரி ஆகாஷின் நண்பர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் 2 காவல் அதிகாரிகளை பாதுகாப்புக்காக இருக்க வைத்தனர், அப்போதுதான் சங்கவி ஒன்று கவனித்தாள் ஆகாஷ் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது ஆனால் அதே போல் சரண் கையில் ஒரு வெட்டு காயம் போல் இருந்தது அதை யாரும் அங்கு கவனிக்கவில்லை ஆகாஷ் கையில் சிறிதாக ஒரு கூர்மையான பொருள் இருந்தது ,அதேபோல் சரண் கையிலும் ஒரு சிறிய வெட்டுக்காயம் இருந்தது ஆனால் அது முந்திய நாள் சரண் கையில் இல்லை ஆனால் மறுநாள் காலையில் இருந்ததை சங்கவி கவனித்தாள் அப்போது தான் ஒன்று புரிய வந்தது இதையெல்லாம் செய்பவன் சரண் என்று ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் கிடைக்காததால் சந்தேகப் படுவதை நிறுத்திவிட்டால்.
அதன்பின்.....