இனியன் அந்த சோகத்தை கூறத் தொடங்கினான். நானும் என்னுடைய மூத்த சகோதரியான மதனிகாவும் இங்கே தான் வாழ்ந்து கொண்டு இருந்தோம், இதுதான் எங்களுடைய பிறந்த ஊராகும். ஒரு நாள் என்னுடைய சகோதரி வியாபாரத்துக்காக வெளியூர் சென்று வந்து கொண்டிருந்தாள் அவள் தன் நான்கு சக்கர வாகனத்தில் மிகவும் மெதுவாகத்தான் வந்து கொண்டிருந்தாள் ஆனால் அவளைப் பின்தொடர்ந்து வந்த இந்த எட்டு நபர்களும் அவளை துரத்தினர் சிறிது நேரம் கழித்துதான் தெரியவந்தது அவர்கள் குடிபோதையில் இருக்கிறார்கள் என்றும் அதனால் மதனிகா வேகமாக வாகனத்தை ஓட்டத் தொடங்கினாள் அப்போதும்கூட இவர்கள் விரட்டி வந்து கொண்டே இருந்தார்கள் திடீரென ஒரு கல்லை எடுத்து அர்ஜுன் கார் கண்ணாடியை உடைத்தார் என்னுடைய சகோதரிக்கு மிகவும் பயந்த நிலையில் இருந்தாள் உடனே மீண்டும் வேகமாக வண்டியை ஓட்ட தொடங்கினாள். அப்போது இருளில் எதிரில் வரும் வாகனங்கள் எதுவும் தெரியவில்லை சாலை எந்த புறம் செல்கிறது என்றும் தெரியவில்லை ஆனால் பின்புறம் இவர்கள் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள் மட்டும் தெரிந்தது, அதனால் அவள் வேகமாக சென்று கொண்டிருந்தாள் பயந்த நிலையில் இருந்ததாள் என் சகோதரிக்கு சிறிது மயக்கம் உண்டானது அதனால் வாகனத்தை நிறுத்த முயன்றாள் ஆனாலும் இவர்கள் துரத்திக் கொண்டே வந்ததால் அவள் காரை வேகமாக செல்ல முயன்றாள். அப்போது மலையிலிருந்து கார் கீழே விழுந்தது அதில் என்னுடைய சகோதரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால். இதற்கு காரணமானவர்கள் இந்த எட்டு பெயர் தான் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தே ஆகவேண்டும் என்று நான் முனைப்புடன் இருந்தேன், அதனால் இவர்களை காவல்துறையிடம் பிடித்து கொடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்தேன், அதன்படி நானும் சிறிது திட்டம் போட்டு அவர்களை தன்வசப்படுத்தி சட்டத்தை முன் நிறுத்தி தண்டனை வழங்க நான் காவல்துறைக்கு உதவி செய்தேன் அப்போது என்னுடைய திட்டம் நன்றாகவே செயல்படுத்தப்பட்டது.
ஆனால்...