இனியன், நானும் சஞ்சயும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நல்ல நண்பர்களாக இருந்தோம். நானும் அவனும் ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தோம், அப்போது ஒரு காவல் அதிகாரி எங்களை தடுத்து நிறுத்தினர். நாங்கள் குடி போதையில் இருந்ததால் அவர் எங்களை கண்டித்தார், அப்போது எனக்கு கோபம் ஏற்பட்டது அதனால் நான் அந்த அதிகாரியை இரும்பால் மண்டையில் அடித்தேன் அப்போது அவர் இறந்து விட்டார். சஞ்சய் அதிர்ச்சி அடைந்தான் அதனால் அவன் இந்த சம்பவத்தை காவல்துறைக்கு கூற வேண்டும் என்று சொன்னான், நான் அவனை தடுத்தேன் ஆனால் அவன் என் பேச்சை கேட்கவில்லை அதனால் மறுநாள் இரவில் அவன் வீட்டிற்கு சென்று அவனை கொன்றுவிட்டேன் அந்த கொலையை எரிவாயு பிடித்ததால் இறந்து விட்டான் என்ற செய்தியை நான் உருவாக்கினேன். அப்போது அவன் வீட்டில் சோதனை செய்யும்போது ஒரு புத்தகம் இருந்தது அதை படித்த போதுதான் அவனுக்கு நடந்த சோகத்தை நான் அறிந்து கொண்டேன் அந்தக் கதையை தான் நான் உங்களுக்கு இப்போது கூறினேன் என்று இனியன் கூறினான். அதன்பின் ஸ்வேதாவுக்கு ஒரு சந்தேகம் எழும்பியது இனியன் ஏன் இந்த எட்டு நபர்களை கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்தாள். இனியன் பேசிக்கொண்டிருந்தபோது அந்தக் கேள்வியை ஸ்வேதா இனியனிடம் முன்வைத்தால், அப்போது யாருக்கும் தெரியாத ஒரு உண்மையைக் கூறினான். நான் உங்களிடம் ஒரு உண்மையை மறைத்து விட்டேன் என்று அவன் அந்த பெண்களிடம் கூறினான். அது என்னவென்று அனைவரும் கேட்டனர் அப்போது சஞ்சயன் சகோதரி மதனிகா காரில் வேகமாக சென்றிருந்தபோது இந்த காடுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட சுற்றித்திரிந்த என்னுடைய தம்பியான சந்திரன் மீது காரை ஏற்றினாள் அதில் சந்திரன் மலையில் இருந்து தூக்கி வீசப்பட்டார் என் தம்பியைக் கொன்றவர்களும் இவர்கள்தான் அதனால் இவர்களைப் பழிவாங்க நானும் துடித்தேன் சஞ்சயின் சோகங்களை படித்தபின் தான் அவனின் சகோதரி இறந்ததற்கு காரணமும் இவர்கள் தான் என்று தெரிய வந்தது அதனால் இவர்களை திட்டம்போட்டு கொன்றேன் என்று கூறினான். இனியன் நல்லதையும் செய்திருக்கிறான் கெட்டதையும் செய்து இருக்கிறான் அதனால் இவனை காவல்துறையிடம் ஒப்படைத்து விடலாம் என்று ஸ்வேதா சங்கவி சஸ்மிதா ஆகிய மூவரும் ஹர்ஷினியிடம் கூறினார்கள் ஆனால் ஹர்ஷினி என்னுடைய முன்னாள் காதலனை கொன்றவன் இவன்தான் அதனால் நான் இவனை கொல்ல போகிறேன் என்று கூறிவிட்டு அழுதுகொண்டே இனியனின் அருகில் வந்து அவன் கழுத்தை அறுத்துக் கொன்றாள். சங்கவி சஸ்மிதா ஸ்வேதா ஹர்ஷினி ஆகிய நால்வரும் மெதுவாக அந்த குடோனில் இருந்து வெளியேறினார்கள்.
" இனியனும் இறந்துவிட்டான் "