இனியன் அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு மயக்க மருந்தை எடுத்து அந்த நான்கு பெண்கள் மீதும் முகத்தில் தெளித்து விட்டான் அப்போது உடனே அவர்கள் அனைவரும் மயங்கி விட்டனர் அதன்பின் அவர்களை ஒரு குடோனில் அடைத்து வைத்தார் . இப்போது ஸ்வேதா சங்கவி ஹர்ஷினி சஸ்மிதா ஆகிய நால்வரும் இனியனின் குடோனில் சிக்கிக் கொண்டனர் ,அதன் பின் அவர்கள் சிறிது நேரம் கழித்து விழித்தனர், விழித்து பார்த்தாள் அவர்களுடன் இருந்த சக நண்பர்களான சபரி தினேஷ் தர்ஷன் சரண் ஆகிய நால்வரும் எதிர்ப்புறத்தில் இனியன் கட்டி வைத்திருந்தான். அப்போது அவர்களை இனியன் மிரட்டினான் உண்மையை சொல்ல வேண்டுமென்று மிரட்டிக் கொண்டே இருந்தான் அந்த நான்கு பெண்களுக்கும் என்ன நடக்குது என்று புரியவில்லை சபரி, இனியனை கோபப்படுத்தி கொண்டே இருந்தான் உடனே இனியன் அவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான் அனைவரும் அதிர்ந்து போனார்கள். நீங்கள் செய்த தவறுகளும், எனக்கு செய்த கொடுமைகளையும் இந்த நான்கு பெண்களுக்கும் தெரிய வேண்டும். அதனால் என்ன நடந்தது என்று கூறு என்று தர்ஷனிடம் கேட்டான், அப்போதுதான் உண்மையான சில நிகழ்வுகள் வெளிச்சத்திற்கு வந்தது. சக நண்பர்களை கொடூரமான வகையில் மர்மமான வகையிலும் கொன்றது நாங்கள்தான் என்று சரண் தர்ஷன் தினேஷ் ஆகிய மூவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் நாங்கள் கொன்றது அஞ்சனா, காவியா, ஐஸ்வர்யா ,மற்றும் நேஹா ஆகிய நான்கு பெண்களை தான் நாங்கள் கொன்றது ஆனால் எங்களுடைய நண்பர்களான ஆதவன், ராஜ், புவனேஷ், இவர்களை கொன்றது நாங்கள் இல்லை என்று கூறினர். அதுமட்டுமின்றி தங்கள் தோழியான ஹிபாவை எங்களுக்கு தெரிந்த ஒரே இடத்தில் தான் நாங்கள் மறைத்து வைத்து இருக்கிறோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதற்கு இனியன் எதற்காக அந்த நான்கு பெண்களை நீங்கள் கொன்று விட்டீர்கள் என்ற காரணத்தையும் கூற சொன்னான், அதனால் சரண் அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தை கூறத் தொடங்கினான்.
அதன்பின்.....