*ஆபத்துக்கால ஜெபக்குறிப்பு*
💥வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
🙏 *தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவழை தீவிரம் அடைந்துள்ளதால், பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருவதினால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதினால், அங்கு வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ள சூழ்நிலையில், அப்பகுதிகளில் விரைவில் வெள்ள நீர் வடிய கர்த்தர் கிருபை பாராட்டவும், மேலும் கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மழையின் அழிவிலிருந்து கர்த்தர் இப்பகுதிகளை பாதுகாத்துக்கொள்ள ஜெபியுங்கள்.*
🙏 *கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மில்லி மீட்டர் மழை பதிவாவது இதுவே நான்காவது முறை என வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கின்ற நிலையில், மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், சமீபத்தில் பெய்த கனமழை மிகப்பெரிய அழிவையும் பாதிப்பையும் கொண்டு வந்துள்ளதால், அநேக ஜனங்களின் வாழ்வாதாரங்கள்தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிற அவலநிலை மாறிட கர்த்தர் சமூகத்தில் மன்றாடி ஜெபியுங்கள்.*
🙏 *இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து, உடைமை சேதங்களைக் குறைத்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்யும் விதத்தில் கொட்டும் மழையிலும், சிறப்பாக பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள், மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் என்று அனைவரையும் கர்த்தர் பாதுகாத்து வழிநடத்தவும், மீட்பு பணிகளுக்கு தடையாக மழை தொடர்ந்து பெய்யாமலிருக்கவும், இவர்களின் முயற்சிகளை எல்லாம் கர்த்தர் வாய்க்கச் செய்யவும் தேவ சமூகத்தில் மன்றாடி ஜெபியுங்கள்.*
🙏 *கனமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான ஏரிகளான நந்திவரம் மற்றும் ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதின் காரணமாக, குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களை முகாம்களிலும், மண்டபங்களிலும் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, வெள்ளத்தில் சிக்கியுள்ள ஜனங்களை படகுகள் மூலம் மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மிகுந்த பாதிப்புக்குள்ளான மக்களின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகள் சந்திக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட கர்த்தர் கிருபை செய்ய ஜெபியுங்கள்.*
🙏 *சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் போலவே தூத்துக்குடி மாவட்டமும் கனமழையால் அதிக துயரத்தைச் சந்தித்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்திற்காக கர்த்தர் சமூகத்தில் மன்றாடவும், மேலும் கனமழை தீவிரமாக இருக்கும் எனக் கூறப்பட்டதால் அநேக பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் அச்சம் நிலவுவதால், அவர்கள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கும், விளைச்சல்களுக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படாமலிருக்க கர்த்தர் கிருபை பாராட்ட ஜெபியுங்கள்.*