Chereads / Tamil Christian messages / Chapter 44 - *MORNING MANNA TAMIL*

Chapter 44 - *MORNING MANNA TAMIL*

*MORNING MANNA TAMIL*

2022 APRIL 01

*நம்‌ மனதைச்‌ சுற்றி ஓர் மதில்‌*

*"சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்‌; எருசலேமின்‌ மதில்களைக்‌ கட்டுவீராக" (சங்‌.51:16).*

புதிய எருசலேமின்‌ மதில்‌ வச்சிரக்கல்லால்‌ கட்டப்பட்டிருந்ததென நாம்‌ வாசிக்கிறோம்‌. அதன்‌ கனம்‌ 144 முழமாயிருப்பதாகத்‌ (சுமார்‌ 216 அடி) தெரிகிறது (வெளி.21:17,18). ஆவிக்குரிய பிரகாரமாக, நாமே தேவனுடைய நகரமாகிய புதிய எருசலேமும்‌ சீயோனுமாயிருக்கிறோம்‌.

புதிய எருசலேமின்‌ மதில்கள்‌ என்பது பல அர்த்தங்களையுடையதாகும்‌. அதன்‌ ஒரு பொருள்‌, நமது மனதைச்‌ சுற்றிலும்‌ எல்லாப்‌ பக்கங்களிலும்‌ பலம்‌ வாய்ந்த ஒரு மதில்‌ இருக்க வேண்டும்‌ என்பதாகும்‌. இந்த தேவ நகரத்தினுள்ளே, தீட்டையும்‌ அருவருப்பையும்‌ நடப்பிக்கிற யாதொன்றும்‌ பிரவேசிப்பபில்லை என நாம்‌ வாசிக்கிறோம்‌. நமது மனதைச்‌ சுற்றிலும்‌ எல்லாப்‌ பக்கங்களிலும்‌, ஒன்றினாலும்‌ வெல்ல முடியாத 'வச்சிரக்கல்லாலான மதில்‌ கட்டப்படுவதன்‌ மூலமாக அது தூய்மையாகக்‌ காக்கப்பட வேண்டுமென தேவன்‌ விரும்புகிறார்‌.

எருசலேமின்‌ அலங்கம்‌ இடிக்கப்பட்டுக்‌ கிடப்பதாக நெகேமியா கேள்விப்பட்டபோது, அவன்‌ "உட்கார்ந்து அழுது, சிலநாளாய்த்‌ துக்கித்து உபவாசித்து, பரலோகத்தின்‌ தேவனை நோக்கி மன்றாடினான்‌' (நெகே.1:3,4). கர்த்தர்‌ தனக்குத்‌ துணைசெய்தபடியினால்‌ அவன்‌, எருசலேமின்‌ அலங்கத்தைத்‌ திரும்பக்‌கட்டி, அதன்‌ இடிக்கப்பட்டிருந்த பகுதிகளை செப்பனிட்டான்‌.

இச்செயலுக்கு நேரான சத்துருக்களின்‌ பிரதிக்கிரியை சுவாரஸ்யமானது; "எருசலேமின்‌ அலங்கத்தைக்‌ கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும்‌, இடிக்கப்பட்ட இடங்கள்‌ அடைக்கப்பட்டுவருகிறது என்றும்‌ சன்பல்லாத்தும்‌, தொபியாவும்‌, அரபியரும்‌, அம்மோனியரும்‌, அஸ்தோத்தியரும்‌ கேட்டபோது, அவர்கள்‌ மிகவும்‌ எரிச்சலாகி, எருசலேமின்மேல்‌ யுத்தம்பண்ண எல்லாரும்‌ ஏகமாய்‌ வரவும்‌, வேலையைத்‌ தடுக்கவும்‌ கட்டுப்பாடு பண்ணினார்கள்‌" (நெகே. 4:7-8). நாம்‌ நமது மனதின்‌ அலங்கத்திலுள்ள இடிக்கப்பட்ட பகுதிகளை அடித்து, அதைச்‌ செப்பனிடுவோமாயின் பிசாசானவன்‌ மிகுந்த கோபமடைவான்‌.

நாம்‌ கட்டுகிற இந்த "மதில்‌' யாது? ஒரு அர்த்தத்தில்‌ அது என்னதான்‌ நேரிடினும்‌ நமது மனது, எண்ணங்கள்‌, கற்பனைகள்‌ முதலியவைகளை எவ்விதத்திலும்‌ தீட்டுப்படுத்துவதில்லை என நாம்‌ தேவனுக்கு முன்பாகச்‌ செய்யும்‌ முறித்துப்போடமுடியாத பிரதிஷ்டை ஆகும்‌. நமது மனதைக்‌ கிறிஸ்துவின்‌ மனதைப்‌ போல நாம்‌ பூரணமாகத்‌ தூய்மையாக வைத்திருந்தால்‌, நமக்கெதிரான பிசாசின்‌ திட்டங்கள்‌ அனைத்தையும்‌ நாம்‌ முற்றிலுமாகக்‌ கவிழ்த்துப்போடக்கூடியவர்களாயிருப்போம்‌ என்பதை அவன்‌ அறிவான்‌.

அன்பான தேவபிள்ளையே, உன்‌ மனதைச்‌ சுற்றியுள்ள மதில்‌ எந்நிலையில்‌ உள்ளது? சத்துருக்களும்‌, காட்டு மிருகங்களும்‌ அதைத்‌ தகர்த்துப்போட்டு, உனது மனதிற்குள்‌ புகுந்து, உன்‌ சிந்தனை மண்டலத்தைத்‌ தீட்டு்படுத்தத்‌தக்கதாக அது அவ்வளவு பெலனற்ற நிலையில் உள்ளதா?