நேற்றைய கேள்விகளுக்கான பதில்கள்
வேதபகுதி: 1 சாமுவேல் 10-13
1. (அ) தன் கோத்திரப் பிதாவின் தாயின் கல்லறையை தன் காணியாட்சியில் கொண்டுள்ள கோத்திரம் எது?
✅ பென்யமீன் (1 சாமு. 10:2)
(ஆ) தேவ பர்வதத்தில் இருந்த அந்நியர் யார்?
✅ பெலிஸ்தியர் (1 சாமு. 10:5)
2. (அ) ஒரே காரியத்தை சாமுவேல் இருமுறை சவுலிடம் வெவ்வேறு காலங்களில் சொன்னார். அது என்ன?
✅ ஏழு நாட்கள் காத்திருத்தல் (1 சாமு. 10:8,13:8)
(ஆ) சாமுவேலின் வார்த்தைகளுக்கு சவுல் ஒருமுறை கீழ்ப்படிந்து வெற்றியையும், மறுமுறை தோல்வியையும் சந்தித்தார். வெற்றி, தோல்விகள் என்ன?
✅ வெற்றி - ராஜாவானார் (1 சாமு. 10:24)
✅ தோல்வி - ராஜ்யபாரம் நிலைநிற்காது (1 சாமு. 13:14)
3. இன்றைய வேதபகுதியில், யார் யாரெல்லாம் ஏழு நாள் காத்திருக்கும்படி கூறினர்?
✅ சாமுவேல், யாபேசின் மூப்பர்கள் (1 சாமு. 10:8, 11:3)
4. (அ) இஸ்ரவேலர் கண்டுபிடிக்காதது என்ன?
✅ சாமுவேலிடம் குற்றத்தை (1 சாமு. 12:5)
(ஆ) இதேபோல, யார் யாரிடம் கண்டுபிடிக்கவில்லை? (ஆதி. 31)
✅ லாபான் - யாக்கோபின் குடும்பத்தாரிடம் (ஆதி. 31:34)
5. (அ) தன் மகனின் வெற்றியை ஊரெங்கும் பறை அறிவித்தவர் யார்?
✅ சவுல் (1 சாமு. 13:3)
(ஆ) 1 சாமு. 13:13,14 ஆவிக்குரிய பார்வையில் விளக்கவும்.
✅ சவுல் பாவஞ்செய்கையில், அப்போது ராஜாவாக இருந்தாலும், ராஜ்யபாரம் நிலைநிற்காது என்ற தேவ வார்த்தையை பெற்றார். நாமும் பாவஞ்செய்கையில், மன்னிப்பைப் பெற்றாலும், நமது பாவத்தினிமித்தமான விழுகையின் தாக்கம் (பின்னடைவாக) ஆவிக்குரிய ஜீவியத்தில் காணப்படும்... மீண்டும் தேவனோடு ஒப்புரவாகையில்தான் சீர்ப்படும். தேவனோடு உள்ள ஐக்கியத்தை புதுப்பித்துக்கொள்வோமாக!