Chereads / Tamil Christian messages / Chapter 41 - Morning devotional

Chapter 41 - Morning devotional

*Breakthrough Prayer day 624- India*

8-12 -2021

*அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.*

2 சாமுவேல் 24:25

1. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம்.

2. தொடரும் விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வர, நிரந்தர தீர்வு கிடைக்க ஜெபிப்போம்.

3. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காய்கறிகளின் விலையும் அதிக அளவில் உயர்ந்து காணப்படுகிறது. மக்களின் பாடுகள் மாற ஜெபிப்போம்.

4. ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய விதிகளை கொண்டுவருகிறது தமிழக காவல்துறை. நம் தேசத்தின் சீர்கேடுகள் மாற மன்றாடுவோம்.

5. நாகலாந்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 14 பேரின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

6. பொது திட்டப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களால் அரசு மற்றும் பொது மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணாகிறது. ஏமாற்றும் நபர்கள் திருந்த ஜெபிப்போம்.

7. நல்ல திறமைகள் பல இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் மேற்கல்வி படிக்க முடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.

8. கடன் பாவத்தில் சிக்கி தவிக்கும் நம் மக்கள் அதிலிருந்து மீண்டுவர ஜெபிப்போம்.

9. நம் தேசத்தில் கொள்ளை நோய்களின் தாக்கம் முற்றிலும் குறைய மன்றாடுவோம்.

10. உத்தரப்பிரதேச மாநிலத்தில் செய்முறைத் தேர்வு எனக் கூறி அழைத்து உணவுப்பொருளில் போதை மருந்து கொடுத்து 17 மாணவிகளுக்கு வன்கொடுமை. பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக ஜெபிப்போம்.

11. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் கிறிஸ்துவ பள்ளியில் ஏழை மாணவர்களை மதமாற்றம் செய்ததாக பரவிய வதந்தியால் எதிர்ப்பாளர்கள் கல் எரிந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். வட மாநிலங்களில் உள்ள இப்படிபட்ட நபர்கள் மனம் திரும்ப ஜெபிப்போம்.

12. மணிப்பூர் மாநில எல்லையில் 500 கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் பிடிபட்டன. பெருகி வரும் போதை மருந்து கடத்தல் கட்டுப்படுத்தப்பட ஜெபிப்போம்.

13. வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. விஞ்ஞானிகள் நல்ல நோக்கத்துடன் கருவிகளை கண்டுபிடிக்க ஜெபிப்போம்.

14. ஈராக் பாஸ்ரா நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்புல் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 20 பேர் காயம். தீவிரவாதிகள் மனம் திரும்ப ஜெபிப்போம்.

15. படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த கண்டக்டரை மாணவர்கள் அடித்தனர். பொதுப் போக்குவரத்தில் பணியாளர்கள் சந்திக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க ஜெபிப்போம்.

16. குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரை பேருந்து நடத்துனர் இறங்கி விட்டதால் பணி நீக்கம். அரசு பணியாளர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள ஜெபிப்போம்.

Amen

*எழுப்புதல் பேசு*

*இன்று தஞ்சாவூர் மாவட்டம், ஒடிசா மாநிலம் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்காக ஜெபிப்போம்.*

*Breakthrough Prayer day 624- India*

8-12 -2021

*And David built there an altar to the Lord and offered burnt offerings and peace offerings. (A)So the Lord responded to the plea for the land, and the plague was averted from Israel.*

2 Samuel 24:25

1. Let us pray for the salvation of all the District Collectors in India.

2. Let us pray for the permanent solution of ongoing farmers protest.

3. Prices of vegetables are also on the rise due to floods caused by heavy rains. Let us pray that the sufferings of the people will change due to hike in essential things.

4. The Tamil Nadu Police is introducing new rules to take action against police officers who harass homosexuals. Let us pray to change the transgression of our nation.

5. Let us pray for the families of the 14 people who were shot dead by the security forces in Nagaland.

6. Government and public tax money is largely misused by contractors carrying out public project work. Let us pray that the deceitful persons will repent.

7. Pray for children who are unable to pursue higher education due to lack of money despite having many talents.

8. Let us pray that our people who are stuck in debt will recover soon.

9. Let's us pray to completely reduce the impact of plagues in our country.

10. In Uttar Pradesh, 17 students were molested by giving drugs in food. Let us pray for the protection of the girl children.

11. Protesters pelted stones at a Christian school in Madhya Pradesh's Vidisha district over rumors that they had converted poor students. Let us pray for the repentance of such persons in the Northern States.

12. Drugs worth Rs 500 crore seized at Manipur state border. Let us pray that the growing drug trafficking will be stopped.

13. The Swiss government has approved a machine for suicide without pain. Let us pray for scientists to invent things with good intentions.

14. A bomb blast near the Iraqi capital, Basra, has killed at least four Iraqi people and injured 20 others. Let us pray for the repentance of terrorists.

15. Students beat conductor who reprimanded students who were traveling on the footboard. Pray for solutions to such problems faced by employees on public transport.

16. An elderly who was selling fish in Kanyakumari district was not allowed to get into the bus. Pray that civil servants will behave with humanity.

Amen