Chereads / Tamil Christian messages / Chapter 1 - Afternoon MANNA TAMIL*

Tamil Christian messages

🇮🇳John_Azad
  • --
    chs / week
  • --
    NOT RATINGS
  • 46.9k
    Views
Synopsis

Chapter 1 - Afternoon MANNA TAMIL*

*MORNING MANNA TAMIL*

2021 AUGUST 30

*கர்த்தராகிய இயேசுவை வெளிப்படுத்தும்படி அழைக்கப்பட்‌டவர்கள்‌*

*"... தம்முடைய குமாரனை எனக்குள்‌ வெளிப்படுத்த தம்முடைய கிருபையினால்‌ என்னை அழைத்த தேவன்‌" (கலா. 1:15,16-Eng)*

இது நமக்கிருக்கும்‌ மேன்மையும்‌ உன்னதமுமான அழைப்பாகும்‌. நம்முடைய ஜீவியத்தின்‌ நோக்கம்‌ இதுவேயாகும்‌. அப்‌.பவுல்‌ இதை விளங்கிக்கொண்டார்‌. இதுவே நம்முடைய அழைப்பு என்பதை நாம்‌ அறிந்தவர்களாய்‌, நமக்குக்‌ கொடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பைக் குறித்து ஜாக்கிரதையுள்ளவர்களாயிருந்தால்‌, நாம்‌ ஒருபோதும்‌ விழுந்துபோகமாட்டோம்‌; நம்முடைய எண்ணங்களில்‌ விழுகை சம்பவிக்காது. ஆனால்‌ பெரும்பாலான நேரங்களில்‌, கர்த்தர்‌ நம்மை எந்த நோக்கத்தோடு அழைத்திருக்கிறார்‌ என்பதை நாம்‌ நினைத்துப்‌ பார்ப்பதில்லை. அப்‌.பவுல்‌, தேவன்‌ தம்முடைய குமாரனைத்‌ தனக்குள்ளிருந்தும்‌ தன்‌ மூலமாகவும்‌ வெளிப்படுத்தும்படி தன்னை அழைத்ததாகக்‌ கூறுகிறார்‌. இதுவே தேவன்‌ நம்முடைய ஜீவியத்தில்‌ செய்துகொண்டிருக்கும் பெரிய வேலையாகும்‌.

நமக்குக்‌ கொடுக்கப்பட்டுள்ள இந்த உன்னத அழைப்பைக்‌ குறித்த அறிவுள்ளவர்களாக நாம்‌ இருப்போமென்றால்‌, நாம்‌ சந்திக்க வேண்டிய சோதனை எதுவாயிப்பினும்‌, நம்முடைய மனப்பான்மையும்‌ ஆவியும்‌ கிறிஸ்துவைப்‌ போன்றிருக்கும்‌; 'கிறிஸ்து என்‌ மூலமாக வெளிப்பத்தப்படும்படியாகவே இந்தச்‌ சோதனை எனக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது' என்று நாம்‌ எண்ணுவோம்‌. நாம்‌ இடறலடைந்தவர்களாகவோ, மனதில்‌ புண்பட்டவர்களாகவோ உணரமாட்டோம்‌. ஆகவே தான்‌ அப்‌.பேதுரு, *"உங்கள்‌ அழைப்பையும்‌ தெரிந்துகொள்ளுதலையும்‌ உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்‌' இவைகளைச்‌ செய்தால்‌ நீங்கள்‌ ஒருக்காலும்‌ இடறிவிழுவதில்லை" (2 பேதுரு 1:10)* என்று எழுதுகிறார்‌.

உங்கள்‌ மூலமாக கிறிஸ்து வெளிப்படுத்தப்படும்படியாக, முதலாவது அவர்‌ உங்களில்‌ உருவாக்கப்பட வேண்டும்‌. *அப்‌. பவுல்‌ கலாத்தியர்‌ 4:19-இல்‌, "கிறிஸ்து உங்களிடத்தில்‌ உருவாகுமளவும்‌ உங்களுக்காக கர்ப்பவேதனைப்படுகிறேன்‌' என்று கூறுகிறார்‌.* ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்‌ அது தாயின்‌ கர்ப்பத்தில்‌ முதலாவது உருவாக வேண்டுமல்லவா? ஆவிக்குரிய பிரகாரமாக, கிறிஸ்து நம்மில்‌ உருவாக்கப்படுவது என்பது கர்த்தராகிய இயேசுவின்‌ சுபாவத்தைக்‌ குறித்த ஒரு தெளிவான வெளிப்படுத்தலை நாம்‌ பெற்றுக்கொள்ளுதலாகும்‌. கர்த்தராகிய இயேசு மரியாளின்‌ கர்ப்பத்தில்‌ பரிசுத்த ஆவியின்‌ மூலம்‌ கருவாக்கப்பட்டார்‌ (லூக்கா 1:37) ஆகவே, பரிசுத்த ஆவியானவரின்‌ மூலமாக நாம்‌ முதலாவது கிறிஸ்துவின்‌ சுபாவத்தைக்‌ குறித்த வெளிப்படுத்தலைப்‌ பெற்றுக்கொள்ள வேண்டும்‌.

பிள்ளைபேற்றிற்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்‌ ஒரு தாயின்‌ ஜெபமும்‌ ஏக்கமும்‌, 'எப்படியாவது ஏனக்கு ஒரு சுகப்‌பிரவம்‌ உண்டாக வேண்டும்‌" என்பதாகவே இருக்கும்‌. இது ஆவிக்குரிய பிரகாரமாகவுங்கூட மெய்யே. கிறிஸ்துவின்‌ சுபாவத்தைக்‌ குறித்து நமக்கு ஒரு வெளிப்படுத்தல்‌ கிடைத்தபின்‌, நம்முடைய இடையறாத ஜெபம்‌ "கர்த்தாவே, இந்த வெளிப்படுத்தல்‌ என்னில்‌ மென்மேலும்‌ வளர்ந்து, உம்முடைய சுபாவம்‌ என்‌ மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்‌" என்பதாகவே இருக்கும்‌. தன்னுடைய கர்ப்பத்தின்‌ உற்பவித்திற்கும்‌, பிள்ளையின்‌ பாதுகாப்பையும் குறித்து ஒரு தாய்‌ மிகவும்‌ கவனமாக இருக்கிறாள்‌. அவ்வாறே நாம்‌ நம்மிலுள்ள வெளிப்படுத்தலைக்‌ கவனமாகக்‌ காத்துக்கொள்ள வேண்டும்‌. அப்பொழுது கிறிஸ்து நம்மில்‌ வளர்ந்துகொண்டிருப்பார்‌.

ஒரு தாய்‌ ஒரு பிள்ளையைப்‌ பெற்றெடுக்கும்போது அவளுக்கு ஒரு பிரசவ வேதனை உண்டாகிறது. ஆகவேதான்‌ *அப்‌.பவுலுங்கூட 'கிறிஸ்து உங்களில்‌ உருவாக்கப்படும்படியாக நான் கர்ப்ப வேதனைப் படுகிறேன்‌' என்று கூருகிறார்‌. தேவபிள்ளையே, கிறிஸ்து உன்னில்‌ கருவாக்கப்படும்படி நீ ஜெபத்தில்‌ பிரசவ வேதனைப்படுகிறாயா?*