*MORNING MANNA' TAMIL 🍞*
*"PRAISE THE LORD!"*
*14/OCTOBER./2021.*
*'காலை மன்னா' தமிழ் 🍞*
*"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!"*
*அக்டோபர். 14 - 2021.*
*"தேவனுடைய பாரத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்"*
*"ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம்பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்"*
*(ஏசாயா. 59:16).*
தீர்க்கதரிசியும் நியாயாதிபதியுமாகிய சாழுவேலின் மூலம் தேவன் இஸ்ரவேலை
'ஆளுகை செய்துகொண்டிருந்தபோது, தங்களை ஆள ஒரு ராஜா வேண்டுமென்று ஜனங்கள் கேட்டார்கள். ஜனங்கள் தன்னைத் தள்ளிவிட்டார்கள் என்று சாமுவேல் கர்த்தரிடத்தில் கூறியபோது, *அவர், "அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை 'ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்" (I சாமு. 8:7) என்று கூறினார்.*
*முன்னொரு சந்தர்ப்பத்தில் ஜனங்கள் தங்களுக்கென்று பொன்னினால் தெய்வங்களை உண்டுபண்ணினபோது, மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசி, தேவனுடைய கோபத்தினின்று அவர்களை இரட்சித்தான் (யாத். 32:31-34).* இப்பொழுது அவர்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டபோது, தேவன் எவ்வளவாகத் துக்கப்படுவார் என்பதைச் சாமுவேல் உணர்ந்து கொண்டான். தேவனுடைய துக்கத்தை அவன் தன்னுடைய துக்கமாகவே தன் மேல் ஏற்றுக்கொண்டான். அவர்கள்மேல் இரக்கமாயிருக்கும்படி தேவனிடம் அவன் விண்ணப்பம் பண்ணினான். ... எல்லாராலும் இவ்விதமாக ஜெபிக்க முடியாது; தேவனுடைய மனதை விளங்கிக் கொள்ளுகிறவர்கள் மட்டுமே இவ்விதம் ஜெபிக்க முடியும்.
*விண்ணப்பம் பண்ணுகிறவன் ஒருவனும் இல்லையென்று தேவன் ஆச்சரியப்பட்டார்* _*என்று ஏசாயா. 59:16 -இல் நாம் வாசிக்கிறோம்*._ பரிந்து பேசுகிறவன் ஒருவனும் இல்லை என்று தேவன் இன்றும் ஆச்சரியப்படுகிறார். சில ஊழியங்கள் வெளியரங்கமாகக்
காணக்கூடியவையாயிருக்க, பரிந்துபேசுதலின் ஊழியமோ, பரலோகத்திலுள்ள பரமபிதா மட்டுமே காணக்கூடியதும், அறைவீட்டினுள் செய்யப்படுவதுமான ஊழியமாயிருக்கிறது.
*பரிசுத்த ஆவியானவர் நமக்காகப் பரிந்துபேசுகிறவராக இருக்கிறார்.* *"ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுக்களோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்"* *(ரோமர். 8:26); நமக்காக வேண்டுதல் செய்யும்படி கர்த்தராகிய இயேசு எப்பொழுதும் உயிரோடிருக்கிறார் (எபி. 7:25)* _*அப்படியெனில், கிருபாசனத்துக்கு முன்பாக நம்முடைய இடைவிடாத பரிந்துபேசுதலின் மூலம் நாம் தேவனுடைய பாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் அல்லவா?*_ _*அப்படிப்பட்ட பரிந்துரையாளர்களையன்றோ தேவன் தேடிக்கொண்டிருக்கிறார்?*_
*~ 🕊️ ஆசீர்வதிக்கப்பட்ட நாள்' ~ 🕊️*