Chereads / Tamil Christian messages / Chapter 9 - MORNING MANNA' TAMIL

Chapter 9 - MORNING MANNA' TAMIL

*MORNING MANNA' TAMIL 🍞*

*"PRAISE THE LORD!"*

*16 /OCTOBER./2021.*

*'காலை மன்னா' தமிழ் 🍞*

*"கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!"*

*அக்டோபர். 16 - 2021.*

*"நீ உடை அணியும்‌ விதத்தைப்‌ பற்றி கவனமாயிரு!"*

*"தேவனாகிய கர்த்தர்‌ ஆதாமுக்கும்‌ அவன்‌ மனைவிக்கும்‌ தோல்‌ உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்‌"*

*(ஆதி. 3:21).*

மனிதனை உடுத்துவிக்கிற விஷயத்தைத்‌ தேவனே' பொறுப்பேற்றுக்‌ கொண்டார்‌. தேவன்‌ அவர்களுக்காகச்‌ செய்த தோல்‌ உடையானது நாம்‌ என்றும்‌ பின்பற்றத்தக்கதொரு

"மாதிரி வஸ்திரமாக' இருந்தது. அது அவர்களுடைய முழுச்‌ சரீரத்தையும்‌ மூடிற்று.

விரிவாக்கப்பட்ட ஆங்கில வேதாகமம்‌ ' *உடைகள்‌'* என்பதை *'நீண்ட மேலங்கிகள்‌ அல்லது தளர்‌ மெய்யங்கிகள்‌ '* என்று குறிப்பிடுகிறது. அது, இன்று பெரும்பாலும்‌

ஜனங்கள்‌ உடுத்துகிறதாக நாம்‌ காண்கிற அரைகுறையான ஆடையும்‌ அல்ல; கண்ணாடி

போன்ற ஊடுருவிக்‌ காணத்தக்க மெல்லிய வஸ்திரமும்‌ அல்ல.

நாம்‌ சரியான விதத்தில்‌ உடை அணிய வேண்டும்‌. அதாவது, அப்‌. பவுல்‌ கூறுவது

போல நாம்‌ *'தகுதியான வஸ்திரத்தினால்‌'* உடுத்துவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கர்த்தர்‌

*நம்மைக்‌ குறித்து விரும்புகிறார்‌ (I தீமோ.2:10).* அவை விலையுயர்ந்த வஸ்திரங்களாகவோ

அல்லது மற்றவர்களை வசீகரிக்கக்கூடிய வஸ்திரங்களாகவோ இருக்கக்‌ கூடாது என்று

மற்றொரு ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது.

*பழைய ஏற்பாட்டிலுங்கூட தம்முடைய ஜனங்கள்‌ உடை அணியும்‌ விதத்தைக்‌ குறித்துக்‌ கர்த்தர்‌ மிகவும்‌ கருத்துள்ளவராயிருந்தார்‌.* செப்பனியா 1:8-இல்‌ அவர்‌, *"மறுதேசத்து வஸ்திரம்‌ தரிக்கிற யாவரையும்‌ தண்டிப்பேன்‌"* என்று கூறுகிறார்‌. மேலும்‌ அவர்‌, *"புருஷரின்‌ உடைகளை ஸ்திரீகள்‌ தரிக்கலாகாது, ஸ்திர்களின்‌ உடைகளைப்‌ புருஷர்‌ தரிக்கலாகாது"* என்றும்‌

கூறுகிறார்‌. *இதைச்‌ செய்யும்‌ எந்தவொரு நபரையும்‌ தாம்‌ அருவருப்பதாக அவர்‌ கூறுகிறார்‌. (உபா. 22:5).*

_*தேவனுடைய பிள்ளையே, மேற்கூறப்பட்டுள்ளவற்றின்‌ வெளிச்சத்தில்‌ நீ அணியும்‌ உடைகள்‌ எவ்விதமாக இருக்கின்றன?*_ _*உன்னுடைய உடைகள்‌ கர்த்தரைப்‌* *பிரியப்படுத்துகின்றனவா?* *"தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்‌ கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே' நாம்‌ உடை அணிய வேண்டும்‌ (I தீமோ. 2:10).* _நாம்‌ கிறிஸ்தவர்கள்‌ என்பதை *நம்முடைய உடை வெளிப்படுத்துகிறதா?*_ _தேவன்‌ தாமே நமக்கு உடைகளை உண்டாக்குவாரெனில்‌,_ _அவை *எப்படிப்பட்டவையாய்‌ இருக்குமோ,* *அவ்விதமாகவே நம்முடைய உடைகள்* *காணப்படுகின்றனவா?*

*~ 🕊️ ஆசீர்வதிக்கப்பட்ட நாள்' ~ 🕊️*