Chereads / Tamil Christian messages / Chapter 15 - *Our Daily Bread (Tamil)*

Chapter 15 - *Our Daily Bread (Tamil)*

*🍞நமது அனுதின மன்னா* *_21-10-2021_*

*Our Daily Bread (Tamil)🍞*

*வேதத்தைப் படித்தல்*

_வாசிப்பு: யோவான் 5.39-47 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 62 ; ஏசாயா 63 ; ஏசாயா 64 ; 1 தீமோத்தேயு 1_

_(இயேசு சொன்னார்) என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே._

_யோவான் 5:39_

_"தேவனை அறிதல்" என்ற தன்னுடைய உன்னதமான படைப்பில், ஜே. ஐ. பேக்கர், நன்கு அறியப்பட்ட நான்கு கிறிஸ்தவ விசுவாசிகளைக் குறித்து பேசுகிறார். அவர்களை "வேதாகம நீர்நாய்கள்" என்று அழைக்கிறார். இந்த நால்வரும் பெரிய நிபுணர்கள் அல்ல என்றபோதிலும், ஒரு நீர்நாயானது ஒரு மரத்தை எப்படி தன் பற்களினால் கடித்து ஊடுருவுமோ அதேபோன்று தேவனை அறிவதற்காய் இவர்கள் வேதத்தை ஊடுருவியுள்ளனர் என்று கூறுகிறார். வேத ஆய்வின் மூலம் தேவனை அறிவது என்பது நிபுணர்களுக்கு உரியது மட்டுமன்று என்பதை பேக்கர் குறிப்பிடுகிறார். "இறையியல் கருத்துக்களை கற்றுத்தேர்ந்த இறையியல் வல்லுநரைக் காட்டிலும், பரிசுத்த ஆவியில் நிறைந்து சாதாரணமாய் வேதத்தை வாசிக்கும் ஒரு நபரோ அல்லது பிரசங்கத்தை கேட்கிற ஒரு விசுவாசியோ, இரட்சகரோடும் தேவனோடும் நெருங்கிய உறவை ஏற்படுத்த முடியும்."_

_வேதத்தை வாசிக்கிற அனைவரும் தாழ்மையான இருதயத்தோடு இரட்சகரை இன்னும் அறிந்து அவரைப்போலவே மாறவேண்டும் என்னும் இலக்குடன் வாசிப்பதில்லை என்பது அவலம். இயேசுவின் நாட்களில் பழைய ஏற்பாட்டை வாசித்தவர்கள், அதில் குறிப்பிடப்பட்ட முக்கியமான நபரை புரிந்துகொள்ளாமல் வாசித்தனர். "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை" (யோவான் 5:39-40)._

_நீங்கள் வேதத்தைப் படிப்பதற்கு தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது வேதத்தைப் படிப்பதையே விட்டுவிட்டீர்களா? வேதத்தை வாசிப்பவர்களைக் காட்டிலும் வேதத்தை ஆராய்ந்து ஊடுருவுகிறவர்கள் மேலானவர்கள். அவர்களின் கண்களையும் மனதையும் திறந்து வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இயேசுவை பார்க்கவும், நேசிக்கவும், அவர்கள் ஜெபத்தோடும் கவனத்தோடும் வேதத்தை ஊடுருவி பாய்கின்றனர்._

_இயேசுவைக் குறித்து சாட்சியிடும் சில பழைய ஏற்பாட்டின் வேதப்பகுதிகள் யாவை? வேதத்தின் நல்ல மாணவனாய் மாறுவதற்கு இன்னும் நீங்கள் என்ன நற்பண்புகளை தத்தெடுத்துக்கொள்ளலாம்?_

*_தகப்பனே, வேதத்தின் எல்லா பகுதிகளிலும் இயேசுவைப் பார்க்க என் கண்களை திறந்தருளும்._*

*Our Daily Bread (Tamil)*