Chereads / Tamil Christian messages / Chapter 5 - *Our Daily Bread (Tamil

Chapter 5 - *Our Daily Bread (Tamil

*🍞நமது அனுதின மன்னா* *_12-10-2021_*

*Our Daily Bread (Tamil)🍞*

*சிறந்த ஆசிரியர்*

_வாசிப்பு: ஏசாயா 40.12-14 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 39 ; ஏசாயா 40 ; கொலோசெயர் 4_

_தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்க... அவர் யாரோடே ஆலோசனைப் பண்ணினார்? ஏசாயா 40:14_

_"எனக்கு இது விளங்கவில்லை!" என் மகள் பென்சிலை மேஜையின் மீது குத்தினாள். அவள் தன்னுடைய கணக்குப் பாடத்தை செய்துகொண்டிருந்தாள். நான் வீட்டில் அவளுக்கு ஆசிரியையாகவும் தாயாகவும் செயல்பட்டேன். நாங்கள் இருவரும் குழம்பினோம். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக படித்த பின்னங்களின் எண் இலக்கத்தை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. என்னால் அவளுக்கு அதை கற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆகையால் நாங்கள் இருவரும் அதை விளக்கும் ஆன்லைன் ஆசிரியரின் காணொலியைப் பார்த்தோம்._

_மனிதர்களாகிய நாம் சிலவேளைகளில் சிலவற்றை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவோம். ஆனால் தேவன் அப்படியல்ல அவர் சகலமும் அறிந்தவர். ஏசாயா, "கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?" (ஏசாயா 40:13-14) என்று கேட்கிறார். அதற்கு பதில்? யாருமில்லை!_

_மனிதன் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டபடியால் மனிதனுக்கு ஞானம் உண்டு. ஆனால் நம்முடைய ஞானம் கொஞ்சமானது; அதற்கு எல்லை உண்டு. ஆனால் தேவன் துவக்கத்திலிருந்து முடிவு வரை அனைத்தையும் அறிந்தவர் (சங்கீதம் 147:5). தொழில்நுட்பத்தின் துணையோடு இன்று நம்முடைய அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். எனினும், நாம் தவறு செய்யக்கூடும். ஆனால் இயேசு எல்லாவற்றையும் "துரிதமாகஒரே நேரத்தில்முழுமையாய்சரியாய்" அறிந்தவர் என்று ஓர் இறையியல் வல்லுநர் கூறுகிறார்._

_எத்தனை மனிதர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாய் தெரிந்தாலும், கிறிஸ்துவின் எல்லாம் அறிந்த குணாதிசயத்திற்கு ஈடாக முடியாது. அவர் நம்மோடு இருந்து நம்முடைய புரிதலை ஆசீர்வதித்துஎது சரிஎது நல்லது என்று நமக்கு கற்றுத் தருவது அவசியமாயிருக்கிறது._

_எதுபோன்ற சூழ்நிலைகளில் தேவனின் எல்லாம் அறிந்த குணாதிசயத்திற்கு நன்றியுள்ளவர்களாய் இருந்திருக்கிறீர்கள்? இயேசுவினால் எல்லாம் புரிந்துகொள்ள முடியும் என்பதை அறிந்து எவ்வாறு ஊக்கப்படுத்தப்படுகிறீர்கள்?_

*_இயேசுவே, நீர் எல்லாம் அறிந்தவராயிருப்பதால் உம்மை துதிக்கிறேன். நான் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறீரோ அதை எனக்குக் கற்றுத்தாரும். முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்க எனக்கு உதவிசெய்யும்._*

*Our Daily Bread (Tamil)*