*👼🍞இன்றைய தின பரலோக அப்பம்🍞👼*
*👉வெற்றி நமதே👈*
*கர்த்தர் மகிமையாய் வெற்றி சிறந்தார்* (யாத் 15:1).
பூமியில் இருள் உண்டாவதற்கு காரணம், சூரியன் மறைவதால் அல்ல.. சூரியன் மறைவதும் இல்லை. மாறாக, பூமி சுழன்று கொண்டிருப்பதால்! - இப்படி இருளும் பகலும் நிறைந்ததுதான் ஒரு நாள் ஆகும்! ஏனென்றால் பூமி உயிர்ப்போடு சுழன்று கொண்டிருக்கிறது! நாமும் உயிரோடு கூட இருப்பதினால், இரவு பகல் போல, "நல்லது கெட்டது என நினைத்துக் கொண்டிருக்கும்" எல்லாவற்றையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. "வெற்றி தோல்வி என எல்லாவற்றையும் காண வேண்டியிருக்கிறது."
நம்மைப் படைத்த தேவன் சர்வ வல்லவர். அவரோடு கூட போட்டியிட யாருண்டு? ஆனால் தேவனுடைய பிள்ளைகள், தேவனைக் குறித்து, எப்படிப் பாடுகிறார்கள் என்றால்?
*கர்த்தர் மகிமையாய் வெற்றி சிறந்தார்* (யாத் 15:1). என்று பாடுகிறார்கள். "தேவன், யாருடன் போட்டியிட்டு வென்றார்?" *அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு எதிரிகளின் மேல் வெற்றியை தந்தார். அந்த வெற்றியை தேவனுடைய வெற்றியாக பார்த்தார்கள்!*
*தன்மேல் அடிக்கப்பட்ட மூன்று ஆணிகளை பிடுங்கிப்போட ஆண்டவருக்கு வல்லமை இல்லையா?* அப்படி அல்ல! மாறாக, *மரணத்தை ஜெயிக்க, நமக்கு ஒரு புதுப் பாதையை அமைக்க, அந்த பாடுகளை ஏற்றுக்கொண்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவையிலே மரணத்தை வெற்றி சிறந்தார்!!*
(கொலோ 2:15) *அந்த வெற்றியின் வேந்தனாகிய தேவன், நம்மையும் எல்லாவற்றிலும், வெற்றி சிறக்கப்பண்ணுகிறார்!* (2கொரி 2.14).
*🤔சிந்திக்க:-🤔*
*உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள், ஆண்டவர் மேல் அடிக்கப்பட்ட ஆணிகள் போன்றதுதான்! அதற்குப் பின்பாகத்தான் மகிமையின் வெற்றி இருக்கிறது! எதனையும் வெல்வோம் இயேசுவின் நாமத்தினால்! தேவனுடைய வெற்றி, நமது வெற்றி. ஆமென்.*