மாறன் இனியனை கொன்றது யார் என்று தெரியாமல் தேடிக் கொண்டு இருந்தான். அவன் இனியனின் விரோதிகள் யாராவது இருக்கிறார்களா என்று தேடினான். பின் முதலில் அவன் நினைவில் வந்தது திவ்யா ஏனென்றால் இனியன் திவ்யாவிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்மாறு வற்புர்தினான் அதனால் அவள் அப்படி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று மாறன் சந்தேகப் பட்டான். இரண்டாவது சந்தேகம் இனியன் ஏற்கனவே வெடிகுண்டு வைத்து அதில் இறந்திருந்த உறவினர்கள் யாரேனும் அவனை கொன்றிருப்பார்களோ என்று நினைத்தான். மூன்றாவதாக இனியன் வேலை பார்த்த தீவிரவாதிகளின் தலைவன் அவனை கொன்றிருப்பார்களோ என்று நினைத்தான். பின் காவல்துறையின் மேல் அதிகாரி மாறனை அழைத்தனர் பின் மாறனின் உதவிக்காக கூடுதல் அதிகாரிகளை அனுப்பி வைத்தனர். மாறன் சில இடங்களுக்கு சென்று ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று தேடினான் அப்போது இனியன் வசித்து வந்த வீட்டிற்கு அருகில் மாறன் இருந்தான் அப்போது ஒருவன் மாறனைப் பார்த்து பயந்து நடுங்கினான் அதை மாறன் பார்த்து விட்டான். உடனே அவன் அருகில் மாறன் சென்றான் அப்போது திடீரென அவன் ஓடத் தொடங்கினான் மாறனின் உதவிக்காக மாதவன் என்பவரும் அவனை துரத்தினர்.
அவன் தப்பித்து ஓடிக் கொண்டேயிருந்தான்.
அப்போது திடீரென....