(உரையாடல் போல் பார்க்கவும்)
இனியன்: ஏன் இப்படி செய்தாய்? எதற்காக இப்படி செய்தாய்?.
மாறன்: அப்படி உடனே கூறிட முடியாது ஒன்றன் பின் ஒன்றாக கேல் கூறுகிறேன்.
இனியன்: ஏன் வெடிகுண்டு வைத்தாய்?
மாறன்: நான் வைக்க வில்லை.
இனியன்: ஓ அப்படியா? சரி ஏன் விக்ரமை கொன்றாய்.
மாறன்: அது விதி.
இனியன்: வீனாக கோபத்தைக் உண்டாக்காதே.
மாறன்: சரி , நான் முதலில் இருந்து கூறுகிறேன்.
இனியன்: சரி , தொடங்கு.
மாறன்: விக்ரமை நீங்கள் குற்றவாளி என்று கூறும்போது நான் இங்கு தான் இருந்தேன்.
இனியன்: புரியவில்லை.
மாறன்: விக்ரம் கையில் இருந்த தொலைபேசி என்னுடையது. என்னுடைய தொலைபேசியை தான் நீங்கள் பின்தொடர்ந்து (track) அவனை குற்றவாளி என்று நினைத்தீர்கள்.
இனியன்: அப்போது நீ எங்கே இருந்தாய்?
மாறன்: நான் விஜய்யின் அலுவலகத்தில் தான் இருந்தேன் அதுவும் கீழ் தளத்தில் தான் இருந்தேன்.
இனியன்: ஆனால் தேவா என் பக்கத்தில் தானே நின்றுகொண்டிருந்தான்?
மாறன்: ஆமாம் அவன் உன் பக்கத்தில் தான் நின்றுகொண்டிருந்தான் ஆனால் விக்ரமை அலுவலகத்திற்கு அழைத்து வந்தவன் நான்.
விக்ரமிற்கு நான் மாறன் என்று தெரியாது. நான் தான் விக்ரமை அழைத்து வந்தேன்.
அப்போது எனக்கு தெரிந்த நண்பரிடம் நான் பேசிக்கொண்டு இருந்தேன் அப்போது தான் என் தொலைபேசியை விக்ரமிடம் குடுத்தேன் அந்த நேரத்தில் தான் நீங்கள் விக்ரமை குற்றவாளி என்று நினைத்தீர்கள். நான் அங்கிருந்து தப்பித்து விட்டேன்.
இனியன்: அதன் பின் என்ன செய்தாய்?
மாறன்: விக்ரம் இறந்த பின் நீயும் நானும் தான் ஒரே வீட்டில் இருந்தோம்.
இனியன்: அப்போது தேவா எங்கு சென்றான்?
மாறன்: விக்ரம் இறந்த பின் நான் தேவாவை ஊருக்கு போக வைத்தேன் பின் நான்தான் தேவா வாக உன் வீட்டில் இருந்தேன்.
இனியன்: ஏன் தேவாவை ஊருக்கு அனுப்பி வைத்தாய்?
மாறன்: ஆதியை கொள்ள.
இனியன்: புரியவில்லை.
மாறன்: ஆதி என் முகத்தை பார்த்து விட்டான் என்று நினைத்தேன் அதனால் அவனை கொள்ள திட்டம் போட்டேன்.
இனியன்: அப்போது விஜய்யின் தொலைபேசிக்கு அழைத்தவர் யார்?
மாறன்: தேவா தான் விஜய்யிடம் பேசினான்.
இனியன்: தேவா ஊரில் தானே இருந்தான்?
மாறன்: இல்லை ஆதி என்ற சிறுவன் சாட்சியாக இருந்ததை அறிந்த உடன் தேவா புறப்பட்டு இங்கு வந்தான். தேவா தான் விஜய்யிடம் என்னை பிடிக்க முடியாது என்று சொன்னான்.
இனியன்: அப்போ இரண்டு பேரும் இங்கு தான் இருந்தீர்களா?
மாறன்: ஆமாம் விஜய் துரத்திக்கொண்டு ஓடியவர் தான் தேவா உன் பக்கத்தில் நான் தான் நின்றுகொண்டிருந்தேன். ஆதியை கொன்றது நான் தான், தேவா இல்லை.
இனியன்: பின் என்ன செய்தாய்?
மாறன்: நீ என் வீட்டிற்கு சென்றது எனக்கு தெரிய வந்தது அந்த நேரத்தில் விஜய்யை திட்டம் போட்டு நீ இல்லாத நேரத்தில் கொன்று விட்டேன்.
(இனியன் கோபமடைந்தான்)
( அனைத்து காவல் அதிகாரிகளும் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து மாறனை நோக்கி நின்றார்கள்)
இனியன்: நான் இப்போது உண்ணை கொள்ள போகிறேன்.
மாறன்: அதற்கு முன்னால் நான் ஒன்று சொல்ல வேண்டும்.
இனியன்: என்ன சொல்ல வேண்டும்?
திடீரென.....