Chereads / Tamil Christian messages / Chapter 21 - *Our Daily Bread (Tamil)*

Chapter 21 - *Our Daily Bread (Tamil)*

*🍞நமது அனுதின மன்னா* *_31-10-2021_*

*Our Daily Bread (Tamil)🍞*

*காலங்களை மீட்டெடுத்தல்*

_வாசிப்பு: சங்கீதம் 104.10-23 | ஓராண்டில் வேதாகமம்: எரேமியா 22 ; எரேமியா 23 ; தீத்து 1_

_சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார். சங்கீதம் 104:19_

_பருவகாலத்தைமீட்பதற்கான வழியை கண்டுபிடிக்க லெய்சா விரும்பினாள். ஆகையினால் அவள் கண்காட்சியில் பார்த்த பெரும்பாலான அலங்காரங்கள் பயங்கரமான மற்றும் கொடூரமான வழிகளில் மரணத்தை கொண்டாடுவதாக காணப்பட்டது._

_அந்த மரண இருளை சுலபமான வழியில் எதிர்கொள்ள எண்ணிய லெய்சா, ஒரு பூசணிக்காயை எடுத்து அதில் அழியாத எழுதுகோலினால் எழுத ஆரம்பித்தாள். "சூரியஒளி" என்று முதலில் எழுதினாள். பார்வையாளர்கள் தொடர்ந்து அதில் எழுத ஆரம்பித்தனர். சிலர் விசித்திரமான காரியங்களையும் அதில் எழுதினர்: உதாரணத்திற்கு "கிறுக்குதல்" போன்ற வார்த்தைகள். சிலர் நடைமுறைக் காரியங்களையும் எழுதினர்: "அழகான வீடு," "ஓடும் கார்." மரித்த தங்களுடைய நேசத்திற்குரிய நபர்களின் பெயர்களையும் எழுதி சிலர் தங்கள் வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். அந்த பூசணிக்காயைச் சுற்றி மக்களின் நன்றியுணர்வு என்னும் சங்கிலி தொடர ஆரம்பித்தது._

_நாம் எளிதில் பார்வையிடக்கூடிய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்து சங்கீதம் 104 தேவனுக்கு நன்றி சொல்லுகிறது. "அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்" என்று சங்கீதக்காரன் பாடுகிறார் (வச. 10). "பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்" (வச. 14). இருளையும் நன்மையாகவும் நோக்கத்தோடும் சிருஷ்டித்ததாக அறிவிக்கிறார். "நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும் ; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்" (வச. 20). அதற்கு பின்பாக, "சூரியன் உதிக்கையில்… அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்" (வச. 22-23). கடைசியாக இவைகள் எல்லாவற்றிற்காகவும், "நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்" (வச. 33) என்று முடிக்கிறார்._

_மரணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாத இந்த உலகத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்காக நாம் சிருஷ்டிகருக்கு நன்றி சொல்லி பழகும்போது ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்._

_நீங்களும் உங்களுடைய நண்பர்களும் மரணத்தை எப்படி பார்க்கிறீர்கள்? இயேசுவின் மீதுள்ள உங்களுடைய நம்பிக்கையை உலகத்திற்கு எந்த வழிகளில் பகிர்ந்துகொள்ளப்போகிறீர்கள்?_

*_நலமான காரியங்களை உலகத்தில் வைத்ததற்காய் நன்றி தகப்பனே. என்னுடைய ஜீவியத்தை உமக்குகந்த ஜீவபலியாய் மாற்றும்._*

*Our Daily Bread (Tamil)*