*🍞நமது அனுதின மன்னா* *_01-11-2021_*
*Our Daily Bread (Tamil)🍞*
*மணியை அடி*
_வாசிப்பு: சங்கீதம் 47 | ஓராண்டில் வேதாகமம்: எரேமியா 24 ; எரேமியா 25 ; எரேமியா 26 ; தீத்து 2_
_தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள். சங்கீதம் 47:1_
_முப்பது முறை கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின், ரீமா புற்றுநோயிலிருந்து விடுபட்டார். அந்த மருத்துவமனை வழக்கப்படி, புற்றுநோயிலிருந்து விடுபட்டவர்கள் அங்கிருக்கும் "புற்றுநோயில்லா மணி" என்ற ஒன்றை ஒலிக்கச் செய்து, தன்னுடைய சிகிச்சையின் முடிவையும், தன்னுடை பூரண சுகத்தையும் தெரிவிக்கவேண்டும். சுகம்பெற்ற ரீமா, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்பொருட்டு மிகுந்த ஆர்வத்துடனும் அந்த மணியை தாங்கியிருந்த கயிறு அறுந்துவிழும் வரைக்கும் அந்த மணியை அடித்து தன் மிகுந்த மகிழ்ச்சியைப் பிரதிபலித்தார்._
_ரீமாவின் இந்த சம்பவம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தேவனின் மகத்துவமான கிரியைகளை பார்க்கும்படிக்கு இஸ்ரவேலர்களுக்கு அழைப்பு விடுக்கும் சங்கீதக்காரனின் எண்ணத்தையும் பார்க்க உதவியது. தேவன் அவர்களின் சத்துருக்களை விரட்டியடித்து தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியை தன்னுடைய ஜனமாய் ஏற்றுக்கொண்டதற்காக அவர்களை, "கைகொட்டி," "கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்" என்று உற்சாகப்படுத்துகிறார் (சங்கீதம் 47:1,6)._
_நம்முடைய வாழ்க்கையில் சரீரப்பிரகாரமான, பொருளாதார அல்லது உறவு ரீதியான குழப்பங்களுக்கு தேவன் எல்லா நேரத்திலும் உடனடியாய் தீர்வு கொடுப்பதில்லை. அதுபோன்ற சூழ்நிலைகளிலும், அவர் "தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்" என்பதினால் அவர் துதிகளுக்கு பாத்திரரே (வச. 8). நாம் விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் தேவன் நமக்கு சுகத்தைக் கொடுத்தால், அது அளவில்லாத ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்போது நாம் மணியை அடித்து கொண்டாடவேண்டும் என்று அவசியமில்லை; ஆனால் ரீமா கொண்டாடியதுபோல தேவன் செய்த நன்மையைக் குறித்து நம்முடைய அளவில்லாத மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கலாம்._
_தேவனுக்கு உங்கள் நன்றியை எப்படி தெரிவிப்பீர்கள்? மகிழ்ச்சியை கொண்டாடக்கூடிய வகையில் சமீபத்தில் அவர் உங்கள் வாழ்க்கையில் செய்த நன்மை என்ன?_
*_நீர் எனக்குக் கொடுத்த பல ஆசீர்வாதங்களுக்காய் நன்றி ஆண்டவரே. நீர் என்னுடைய வாழ்க்கையில் செய்யும் கிரியைக்காய், நான் கைகொட்டி, கெம்பீரசத்தத்தோடே ஆர்ப்பரிக்கிறேன்._*
*Our Daily Bread (Tamil)*