Chereads / Tamil Christian messages / Chapter 26 - *Our Daily Bread (Tamil)*

Chapter 26 - *Our Daily Bread (Tamil)*

*🍞நமது அனுதின மன்னா* *_05-11-2021_*

*Our Daily Bread (Tamil)🍞*

*மாயையில் மகிழ்ச்சியைத் தேடுதல்*

_வாசிப்பு: பிரசங்கி 2.1-11 | ஓராண்டில் வேதாகமம்: எரேமியா 34 ; எரேமியா 35 ; எரேமியா 36 ; எபிரெயர் 2_

_என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பிரசங்கி 2:11_

_"சலிப்பு எனக்கு பிடிக்கும்" என்ற வலைப்பதிவின் உரிமையாளர் ஜேம்ஸ் வார்டு, 2010ல் "சலிப்புக் கருத்தரங்கு" என்று ஒன்றை ஒழுங்குசெய்திருந்தார். அது யாராலும் கவனிக்கப்படாத மிகவும் சாதாரணமான, ஒரு நாள் கொண்டாட்டம். இதற்கு முன்பாக, அந்த கருத்தரங்குகளில், தும்மல், வெண்டிங் இயந்திரத்தில் ஏற்படும் சத்தம் மற்றும் 1999ன் இங்க் பிரிண்டர்கள் போன்றவற்றில் ஏன் சத்தம் வருகிறது போன்ற சலிப்பான தலைப்புகள் விவாதிக்கப்பட்டது. வார்டுக்கு அவைகள் மிகவும் சலிப்பானவைகள் என்பது நன்றாய் தெரியும். ஆகையினால் அந்தக் கருத்தரங்கில், ஆர்வமூட்டக்கூடிய, அர்த்தமுள்ள, ரசிக்கக்கூடிய தலைப்புகளை தெரிந்தெடுக்கும்படி செய்தார்._

_பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அர்த்தமற்ற காரியங்களில் மகிழ்ச்சியைத் தேடும் முயற்சியில், ராஜாக்களில் ஞானியான சாலமோன் முயற்சித்தான். அவன் பெரிய வேலைகளை செய்தான், மந்தைகளை வாங்கினான், வீடுகளைக் கட்டினான், பாடகர்களை சேகரித்தான், கட்டடங்களைக் கட்டினான் (பிரசங்கி 2:4-9). இவற்றில் சில மதிப்பு மிக்கவைகள், சில மதிப்புக் குறைந்தவைகள். அவற்றில் அர்த்தத்தைத் தேட முயன்ற ராஜா, சலிப்பைத் தவிர வேறொன்றையும் பெறவில்லை (வச. 11). தேவனை சேர்த்துக்கொள்ளாமல், மனித அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஓரு உலகப் பார்வையை சாலமோன் தனக்காக தேட முயன்றார். ஆனால் தேவனை நினைப்பதின் மூலமாகவும் அவரை ஆராதிப்பதின் மூலமாகவுமே மகிழ்ச்சியை கண்டுபிடிக்கமுடியும் என்ற முடிவுக்கு வருகிறார் (பிரசங்கி 12:1-7)._

_இந்த சலிப்பின் சூறாவளியில் சிக்கியிருக்கும் நாம், நம்முடைய சிருஷ்டிகரை நினைத்து (வச. 1), நம்முடைய சிறிய கருத்தரங்கைத் துவக்குவோம். தேவன் அதை அர்த்தமுள்ளதாய் மாற்றுவார். அவரை நினைத்து அவரையே ஆராதிக்கும்போது, சாதாரணமானவற்றில் ஆச்சரியத்தையும், வழக்கமாய் செய்வதில் நன்றியுணர்ச்சியையும்,_ _அர்த்தமற்றவைகளில் மகிழ்ச்சியையும் கர்த்தர் நமக்குக் கட்டளையிடுவார்._

_நம்மை திருப்திபடுத்தாத காரியங்களில் அர்த்தத்தைத் தேடுவது ஏன் கடினமாய் தெரிகிறது? தேவனிடத்தில் உங்கள் அர்த்தத்தைத் தேட, எப்படி அவரை உங்களுடைய வாழ்க்கையில் முக்கியத்துவப்படுத்தி, அவருக்கே ஆராதனை செய்வீர்கள்?_

*_தேவனே, உம்மால் மாத்திரமே சாதாரணமானவைகளை அர்த்தமுள்ளவைகளாக்க முடியும். என்னுடைய வாழ்க்கையின் சலிப்பான தருணங்களை உம்முடைய அர்த்தம், மகிழ்ச்சி, மற்றும் ஆச்சரியத்துடன் இணையச் செய்யும்._*

*Our Daily Bread (Tamil)*