Chereads / இரவுக்கு ஆயிரம் கைகள் part1 / Chapter 37 - இரவுக்கு ஆயிரம் கைகள் part37

Chapter 37 - இரவுக்கு ஆயிரம் கைகள் part37

ராம் சுஜிதாவின் கல்யாணத்தில் பம்பரமாய் வேலை செய்தான் . தீபக், லதா, தீபு எல்லோரும் வந்திருந்தார்கள். என்ன ராம் சார் என்ன கேஸ் அடுத்து இருக்கு என விசாரித்தார் சுகேஷ். இப்போதைக்கு ஒன்னும் இல்லே சார் என்றான். சொல்லி முடிக்கவும் போன் வரவும் சரியாய் இருந்தது. excuse மீ என்றவாறே கீழே வெளியே வந்து மறுபடி அந்த நம்பருக்கு கால் செய்தான். யாரும் எடுக்கவில்லை . ராம் சுஜிதாவினை நினைத்து பெருமை பட்டான். எவ்ளோ தைரியம் இந்த பொண்ணுக்கு என ஆச்சரியப்பட்டான். திரும்ப வேலைக்கு வந்தால் அவளுக்கு தனி ஆபீஸ் அமைத்து தர வேண்டும் என ஆசைப்பட்டான். மறுபடி போன் அடித்தது .. வேண்டாம்மா போன் பண்ணாதே என அந்த குரல் தடுத்தது. நாங்க இங்க கொட்டிவாக்கதுலேயிருந்து பேசறோம் எங்க வீட்டு வேலைக்கார பொண்ணை 15 நாளா காணோம். உங்களால ஹெல்ப் பண்ண முடியுமா.இல்ல போலீஸ் காண்டாக்ட் பண்ணுங்க .. வைத்துவிட்டான்.மறுபடி போன் அடித்தது பொண்ணு minor போலீசுக்கு தெரிஞ்சா பிரச்னை பெருசாயிடும் கொஞ்சம் பார்த்து ஹெல்ப் பண்ணுங்க சார். எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு அவரு foreign ல இருக்காரு ..பையன் காலேஜ் படிக்கிறான் . சரி உங்க பேரென்னம்மா? தேவிகா . சரி நான் நாளைக்கு வந்து பாக்குறேன் அட்ரஸ் வாட்ஸாப்ப் பண்ணுங்க. ரொம்ப தேங்க்ஸ் சார். 

வீடு சொந்த வீடா ? ஆமா சார். எவ்ளோ நாளா அந்த பொண்ணு இங்கே வேலை பாக்குது. அவங்க அம்மாக்கு உடம்பு சரியில்லேன்னா வரும் .அவங்க அப்பா ஒரு குடிகாரர், அவங்களுக்கு வேற வருமானம் கிடையாது . பொண்ணு என்ன படிச்சிருந்தா பிளஸ் 2 வோட நிறுத்திட்டாங்க . ம்ம் எப்படி காணாம போச்சுன்னு தெரிஞ்சுது. அன்னைக்கி எங்க வீட்ல பெரியவனுக்கு பர்த்டே பார்ட்டி அன்னைக்கின்னு பார்த்து அந்த அம்மாவுக்கு உடம்பு சரியில்லே . அந்த பொண்ணு வீட்டுக்கு போக கொஞ்சம் லேட்டா ஆயிடுச்சு.. எத்தனை மணி இருக்கும் 10 மணி ஆயிடுச்சி .ஆட்டோ கூப்பிட்டோம் ஒருத்தரும் வரல்ல . அப்புறம் தெருமுனைல ஆட்டோ இருக்கும்னு என் பையன் சொன்னான் அவன்கூட அனுப்பி வெச்சோம் . அங்கிருந்து வீட்டுக்கு போயிருப்பான்னு நினைச்சோம். அவ எங்க வீட்லயே தங்கிட்டானு அவங்க parents நெனைச்சுட்டாங்க. நாங்க பார்ட்டி கொண்டாடுனதுல அவளையே மறந்துட்டோம். ம்ம் அந்த பொண்ணு பெரு நீலா . போட்டோ இருந்தா அனுப்புங்க .

பையன் ஆட்டோ புடிச்சு அனுப்புனானா.. இல்ல நானே போய்கிறேன்னு சொன்னதுனால இவன் வந்துட்டான். அவங்க parents போலீசுக்கு போலாம்னு சொன்னாங்க.. நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன் . போலீசுக்கு இன்போர்ம் பண்ணுங்க அதான் நல்லது சரி சார். உங்க பொண்ணு பேரு ரம்யா பையன் பேரு குமரன் . ம்ம் நான் அவங்க அம்மா அப்பாவை பாக்கலாமா ,அவங்க அம்மாவை வர சொல்றேன் . உங்க பேரென்னம்மா காமாட்சி. நீங்க ஏதாவது திட்டுனீங்களா ? இல்ல ஏதாவது காதல் விவகாரம் இருந்துச்சா ? அப்படியெல்லாம் எதுவும் இல்லீங்க. சரிம்மா உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்குதா ? இல்லேங்க .சரிம்மா கண்டு பிடிச்சிடுவோம் கவலைப்படாதீங்க. நீங்க மொதல்ல போலீசுக்கு இன்போர்ம் பண்ணுங்க.

போலீஸ் வந்து துருவி துருவி விசாரித்தார்கள் . ஏன் முன்னமே சொல்லவில்லை என கடிந்து கொண்டார்கள் . வீட்டை சல்லடை போட்டார்கள் . அதே போல நீலாவின் வீட்டையும் சோதனை போட்டார்கள். ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் என எல்லா இடங்களிலும் நீலாவின் போஸ்டர் ஒட்டப்பட்டது.mr kumaran அன்னிக்கு பர்த்டே பார்ட்டிக்கு யாரெல்லாம் வந்திருந்தாங்க .என் friends கொஞ்சம் பேரு வந்திருந்தாங்க . அதுல பசங்க எத்தனை பேரு மூணு பேரு தீபன், கார்த்திக், நரேஷ்னு மூணு பெரும் வந்திருந்தாங்க. function முடியற வரை எல்லாரும் இருந்தாங்களா ?ஆமா சார் வேற என்ன ஈவென்ட் வச்சிருந்தீங்க . நான் keyboard வாசிப்பேன் . அதனால வெளியிலிருந்து யாரையும் கூப்பிடல .நானே பாட்டுப்பாடி வாசிச்சேன். ஓ நீங்க பாடவும் செய்வீங்களா .ஆமா சார் .

தீபு இந்த நீலா கேஸ் ல ஒரு முன்னேற்றமும் இல்லையே .. என்ன நடந்துச்சுன்னும் தெரியல . பக்கத்து வீடுகள்ல விசாரிச்சு பார்த்தீங்களா .. விசாரிச்சு பார்த்தேன் அவங்களும் தேவிகா பத்தியும் அவங்க husband பத்தியும் நல்ல விதமாதான் சொல்றாங்க. அந்த பையன் குமரன்? அவன் இன்னொசென்ட் பையன். இப்போதான் காலேஜ் பைனல் இயர் படிக்குறான்.சரி அப்போ அவங்க husband இடையில வந்து போனாரான்னு ? இல்ல அவர் வரலேன்னு போலீஸ் confirm பண்ணிட்டாங்க. ம்ம் வேற ஏதாவது நகைக்கு ஆசைப்பட்டு அப்படியெல்லாம் நகை போடுற அளவுக்கு வசதியெல்லாம் இல்ல. 

நீலா தற்கொலை செய்து கொண்டிருப்பாளோ என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்தது . ராம் நீலா வீட்டுக்கு அப்போதுதான் சென்றான். என்ன தம்பி எதுவும் துப்பு கெடைச்சுதா ? ஏன் பொண்ணு மொகத்தையாவது ஒரு தடவை பார்ததுகிறேன் தம்பி என்று அழுதார் காமாட்சி . நீலாவுடைய அறை என்று ஒன்று இல்லை அந்த ரூமில்தான் நீலாவின் பொருட்கள் வைக்க பெற்றிருந்தன . ராம் உங்க பொண்ணுக்கு டைரி எழுதுற பழக்கம் இருக்கா? அதெல்லாம் தெரியாது தம்பி நீங்களே போய் பாருங்க ஏதாவது கெடைக்குதான்னு. அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தான். நீலா டைரியெல்லாம் எழுதவில்லை ஒரு புத்தகமே எழுதி இருந்தாள்.அது ஒரு நோட்டுப்புத்தகம் .

அவசர அவசரமாக நீலா காணாமல் போன தேதியை புரட்டினான். அன்புள்ள குமரன் அண்ணாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளீர்கள் . எனக்கு எந்த தேவையென்றாலும் செய்து வந்திருக்கிறீர்கள் இன்று உங்களுக்கு பிறந்த நாள். இந்த நாளில் உங்களுக்கு கொடுப்பதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை எனும் பொது என் மனசு வேதனையில் ஆழ்ந்து விடுகிறது . உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவே நான் வருவேன். நீங்கள் என் படிப்புக்கு உதவுவதற்கு ப்ரோமிஸ் பண்ணியிருக்கிறீர்கள் . உங்கள் மனசுக்கு எல்லாம் நல்ல படியாக வருவீர்கள் .இன்றைக்கு என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் . குமரன் குறித்து இவ்வாறு எழுதி இருந்தாள் . இது ஓரு வேளை ஒரு தலை காதலாக இருக்குமோ என எண்ணினான். எல்லா பக்கங்களிலும் குமரன் பெயர் தவறாமல் இருந்தது .நீலாம்மா நான் இந்த டைரி ஐ எடுத்துக்கொண்டு போறேன் என்றான் ராம். சரிப்பா எப்படியாவது என் பொண்ணை கண்டுபிடிச்சு கொடுப்பா . உனக்கு கோடி புண்ணியமாகும் 

என்றாள்.

டைரி ஐ குமரனிடத்தில் காட்டிய போது ஆமா அவ எனக்கு இன்னொரு தங்கை மாதிரிதான் . அப்படித்தான் இந்த வீட்ல அவளை நடத்தினோம் . நீங்க எங்களை சந்தேகப்படாதீங்க . சே சே ஒரு வேளை உங்க மனசுல அது லவ்வா இருக்கலாமோன்னு ஒரு சின்ன தயக்கம் . அதான் உங்ககிட்டயே கேட்டேன் . அப்படியெல்லாம் இல்லை சார். இருந்தா நானே எப்பவோ சொல்லி இருப்பேனே . உங்க வீட்டுல சமீபத்துல ஏதாவது திருட்டு போச்சா ? அது சம்பந்தமா ஏதாவது கூப்பிட்டு விசாரிச்சீங்களா நீலாவை. இல்லவே இல்லை என மறுத்தாள் தேவிகா . 

ஆனா ஒரு தடவை 5000 ரூபாய் காணாம போச்சு . எப்போ ரெண்டு மாசம் முன்னாடி . நாங்க அதை எல்லா இடத்துலயும் தேடினோம் ,கிடைக்கல.எங்க வெச்சிருந்தீங்க பீரோல தான் வச்சிருந்தோம் . நீங்க ஏன் இதை போலீஸ் கிட்ட சொல்லல . அவங்க அனாவசிய கேள்வி கேப்பாங்கன்னு விட்டுட்டோம் . ம்ம் இன்னும் ஏதாவது இருந்த இப்போவே சொல்லுங்க இது ஒரு முக்கியமான விஷயம் . ஒரு வேளை நீலா எடுத்திருக்கலாம் இல்லையா ? சே சே அவ அப்படிப்பட்ட பொண்ணு இல்லை சார் . எங்கேயோ நாங்கதான் தவற விட்டுட்டோம் இல்ல செலவு பண்ணியிருப்போம் .

நீலா யாரையும் விரும்பவில்லை. அதே சமயம் நீலாவை யாராவது விரும்பினார்களா என்ற கேள்விக்கு நீலாவின் தோழிகள் மறுப்பு தெரிவித்தனர். குடும்ப கஷ்டமே பெரிய கஷ்டம் சார். நல்லா படிப்பா சார் அவ . தேவிகா வீட்டு தெருமுனை ஆட்டோகாரர்களிடம் விசாரித்ததில் அந்த பொண்ணு ஆட்டோ எல்லாம் புடிக்கல சார். கொஞ்ச நேரம் பஸ் ஸ்டாப் ல நின்னது அப்புறம் காணாம போயிடுச்சு என்றார்கள் . பஸ் ஸ்டாப் அருகில் சிசிடிவி பொருத்தப்பட்டு இருந்தது . ராம் அந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தான் . குமரன் பைக்கில் கொண்டு வந்து போகும் காட்சி பதிவாகி இருந்தது . பையிலிருந்து எதையோ எடுத்தெடுத்து நீலா பார்ப்பதும் பின்பு வைப்பதுமாய் இருந்தாள் .அது என்னவென்று தெளிவாய் இல்லை .தேவிகாவுக்கு போன் செய்து நீங்க ஏதாவது gift அன்று நீலாவுக்கு கொடுத்தீர்களா என கேட்டான் . இல்லையே . ஏதாவது பொருள் காணாம போச்சா இல்ல சார். சரி ஓகே . இல்ல நீலா எதையோ எடுத்து எடுத்து பாக்குறா அது என்னனு தெரியல . நாங்க கொஞ்சம் கேக்கும் ,டிஃபனும்தான் குடுத்து விட்டிருந்தோம் . இல்ல வேற ஏதோ இருக்கு என்றான் ராம் .