Chereads / இரவுக்கு ஆயிரம் கைகள் part1 / Chapter 38 - இரவுக்கு ஆயிரம் கைகள் part38

Chapter 38 - இரவுக்கு ஆயிரம் கைகள் part38

ராம் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். ஒரு வேளை சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருப்பாளோ ? இல்லை மின்சார ரயிலில் அடிபட்டிருப்பாளோ என யோசித்தான் . அவசர அவசரமாக ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டான் . அவனுடைய ஊகம் சரிதான் . ரெண்டு நாள் கழித்து அவர்கள் அழைத்தார்கள் . குறிப்பிட்ட தேதியில் நீலா ரயில்வே ட்ராக்கில் அடிபட்டு செத்துவிட்டாள் என சொன்னார்கள் .ட்ராக்கில் அடிபட்டு செத்தது நீலாதான் என காமாட்சி உறுதி செய்தாள். தேவிகா,ரம்யா, காமாட்சி மூவரும் வேதனையுடன் அழுதனர் . போஸ்டமோர்டெம் ரிப்போர்ட் அவ்வளவு தெளிவாக இல்லை . ராம் இது தற்கொலையா இருக்க வாய்ப்பில்லை. தவறி போய் ட்ரைனில் அடி பட்டிருக்கலாம் என்றான் .என் husband வெளிநாட்டுலே இருந்து வரட்டும் வந்த உடனே இவங்களுக்கு ஹெல்ப் பண்றேன் என்றாள் தேவிகா.. காமாட்சியிடம் சடலம் ஒப்படைக்க பட்டது , என்னவோ என் பொண்ணு மூளியா செத்துருக்காளே என சொன்னாள் காமாட்சி .அப்டின்னா என்னம்மா என்றான் ராம் , அவ போட்ருந்த கவரிங் தோடு கூட மிஞ்சலப்பா என்றாள் . போலீசார் நீலாவின் கேஸ் கிளோஸ் செய்ய பார்த்தனர் . சந்தேக மரணம் என பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டான் .

ராம் பர்த்டே function நடந்த அன்று எடுத்த எல்லா விடீயோவையும் சோதித்தான் . அதில் நீலா தோடு அணிந்திருந்தாள் . சந்தேகத்தின் பேரில் ,கார்த்திக், நரேன், தீபன் மூவரையும் தனி தனியே விசாரித்தான். நீங்க யாராவது ரயில்வே ஸ்டேஷன் ல நீலாவை ட்ராப் பண்ணீங்களா இல்ல பார்த்தீங்களா இல்லை என்றே பதில் வந்தது . ரயில்வே சிசிடீவியும் செக் செய்தான் , அதிலும் நீலா இல்லை. வேறு வழியில்லாமல் இந்த கேஸ் முடித்து கொள்வதாக சொன்னான் ராம் , ரொம்ப தேங்க்ஸ் ராம் சார் . நீங்க இல்லேன்னா எங்க மேல வீண் பழி வந்திருக்கும் என்றாள் தேவிகா.இட்ஸ் ஓகே என்றான் ராம் . அநியாயமா ஓர் உயிர் போயிடுச்சே 

அதோடு நீலா விஷயத்தை மறக்க முயன்றான். ஆனால் நீலா என்னவோ எடுத்து எடுத்து பார்த்து கொண்டிருந்தாள், அது என்னவாக இருக்கும். புது தோடு வாங்கியிருப்பாளோ என எண்ணினான் . அதுக்கு ஆசைப்பட்டு எவனாவது ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கிறது . எதற்கும் அந்த விடியோவை ஜூம் செய்து பாப்போம் என முயற்சி செய்தான். அது ஜிவெல்லர்ஸ் box தான் , அதில் இருந்த பெயரை வைத்து நீலா கடைக்கு வந்தாளா என cctv செக் செய்த போது நீலா இல்லை.. ஆச்சர்யமாக குமரன் இருந்தான் . ஆமா சார் இவரை எங்களுக்கு நல்லா தெரியும் அவங்க சிஸ்டருக்காக நகை வாங்குறேன்னு சொன்னாரு . ஓ அப்படியா ..

குமரனிடம் விசாரித்த போது ஆமா அது என் சிஸ்டருக்கு வாங்குனதுதான் என்றான். பில்லையும் காட்டினான். அந்த நகை இப்போ எங்கே ?எனும் போது . தேவிகா ஷாப்பிங் போய்விட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்தாள்.ரம்யா உன் தோடு ரிப்பேர் பண்ண கொடுத்தோம்ல அதை வாங்கிட்டு வந்துட்டேன் . தோடு ரிப்பேர் பண்ண கொடுத்தீர்களா ? எப்போ அதான் நீலா காணாமல் போன மறுநாள் ..அதெப்படி அவ்வளவு துல்லியமா சொல்லறீங்க . அது வந்து.. இது எப்போ வாங்குனது ?போன வருஷம் . பில் இருந்தா காட்டுங்க .. என்னவோ ரம்யா ஆசைப்பட்டு வாங்குனா இதை பொய் பெருசு படுத்துறியே ..அது அவ வாங்குனது இல்ல நான் வாங்குனது ..என்னடா சொல்ற? உனக்கெதுடா அவ்ளோ பணம் ..ஓ நீதான் அந்த பணத்தை எடுத்தியா ?ஆமாம் . எதுக்குடா எடுத்த ?சொல்லி தொலைடா..

சும்மா சும்மா யாரும் நீலாவை திருடின்னு சொல்ல வேண்டாம் .அந்த 5000 பணத்தை நாந்தான் எடுத்தேன். எதுக்காக ? நீலாவுக்கு தோடு வாங்க .. அட பாவி ஏன்டா போய் சொல்லுற .. உண்மையைத்தான் சொல்லுறேன். அவ என் மேல காட்டுன அன்புக்காக அந்த வேலையை நாந்தான் செஞ்சேன்.அம்மா உங்ககிட்டே அவ தோடு எப்படி வந்தது ? சொல்லுங்க..ம்ம் அது வந்து இங்கயே தவறவிட்டு போய்ட்டா? அப்ப அவ காணா போன அன்னிக்கி திரும்ப வந்தாளா ? இல்ல அது வந்து இப்ப சொல்ல போறீங்களா இல்லையா? ஆமா எதுக்காக திரும்ப வந்தா ? அது வந்து ஏன் இத்தனை நாளா எங்கிட்ட சொல்லல . கேக்குறேன்ல ? எதுக்காக திரும்பி வந்தா? சொல்றேன் . அன்னிக்கி பஸ் வரலை, ஆட்டோ ல தனியா போக பயமாயிருக்குனு சொன்னா.அதனால திரும்ப வந்து நைட் இங்கேயே தங்கிக்குறேன்னு சொன்னா ..அப்போ

வா நீலா என்னாச்சு வீட்டுக்கு போகலையா ? இல்ல ரொம்ப நேரமா பஸ் வரலை ..ஆட்டோ ல தனியா போக பயமாயிருக்கு .. சரி சரி , நைட் தங்கிட்டு காலம்பற போகட்டா ? சரி உன் இஷ்டம் . என்னடி இது தோடு புதுசா இருக்கு வாங்குனியா ? ஆமா ஏதுடி அவ்ளோ பணம் அது வந்து சொல்லுடீன்னு சொல்றேன்ல.. இல்ல குமரன் அண்ணாதான் பர்த்டே கிப்ட்டா வாங்கி குடுத்தாங்க.. சீ பொய் சொல்றியா .. எங்களுக்கு தெரியாம அதுவும் உனக்கு அவள் முடியை பிடித்து தள்ளினாள் ரம்யா. டைனிங் டேபிள் ல் மோதி சொத்தென விழுந்தாள் நீலா.என்ன காரியமடி பண்ண ரம்யா .. நான் வேணும்னே பண்ணல அம்மா ..மொதல்ல போய் தூக்குடி .. துவண்டு போய் விழுந்தாள் நீலா மூக்கிலும் காதிலும் ரத்தம் சொட்டியது . இப்போ என்னம்மா பண்றது .அவ விதி அவ்ளோதான் பேசாம railway track ல கொண்டு போய் போட்டு விடுவோம் .நீ யார்கிட்டயும் சொல்லாதே அந்த தோடை கழட்டுடி ... 

இதை நீங்கதான் செஞ்சீங்களா after all ஒரு தோடுக்காக அநியாயமா ஒரு உயிரை பறிச்சிடீங்களே...தேவிகா உங்களை கைது பண்ண எவிடென்ஸ் இல்லை . ஆனா நீங்களாவே surrender ஆகிடுங்க அதுதான் உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் நல்லது. நாங்க வேணும்னு பண்ணலே அப்புறம் ஏன் ஒன்னும் தெரியாத மாதிரி இத்தனை நாள் சொல்லாம இருந்தீங்க . இந்த தோடு ஒண்ணே போதும் நீங்க செஞ்ச கொலைக்கு சாட்சி . குமரன் ரொம்ப சாரி சார் நீலா கிடைச்சுடுவானு எனக்கு நம்பிக்கை இருந்தது . அடுத்த வருஷம் காலேஜ் சேர்த்து விடறேன்னு சொல்லி இருந்தேன். நானே இப்போ அவ சாவுக்கு காரணமாயிட்டேன் . உங்க அம்மா தேவிகாவோட ஆசைக்கிதான் நீலா பலி ஆயிட்டாங்க. இப்போ காமாட்சி அம்மாவுக்கு நான் என்னனு சொல்லுவேன் . ராம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்தான். குற்றத்தை ஒப்புக்கொண்டு ரம்யா ,தேவிகா கைதானார்கள் . குமரன் அவனுடைய அப்பாவுக்கு போன் செய்து விவரத்தை சொன்னான். காமாட்சி நிராதரவாக நிற்பதை நினைக்கும் போது ராம் வேதனை அடைந்தான்.

 ராம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான் . என்ன பாஸ் நடந்துச்சு? அந்த அம்மாவே கொன்னுட்டு நாடகம் ஆடியிருக்காங்க. எதுக்கு அப்புறம் காணோம்னு நம்மளுக்கு போன் பன்னங்களாம் . என்னவோ அவங்க பண்ணது பெரிய தப்பு தீபு. இல்லாதவங்களுக்கு இன்னும் கொடுமையெல்லாம் நடக்கத்தான் செய்யுது . அது என்னவோ உண்மைதான் பாஸ். இனி கேஸ் எடுக்கும் போது கவனமா இருக்கணும் .ஆமா பாஸ் .. நம்மால முடிஞ்ச உதவிய காமாட்சி அம்மாவுக்கு செய்யணும்.