வேறொரு இடத்தில் இருந்து அழைத்து வந்த அனைவருக்கும் அந்த பிரச்சினைகளுக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் இக்கதையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது ஒன்று மட்டும் தான், அவர்கள் அனைவரும் உயர் நண்பர்களாக கல்லூரி பருவத்தில் இருந்தார்கள். ஆதவன் அழைத்து வந்த தர்ஷன், அஷ்வந், சபரி , புவனேஷ் , சரண், ராஜ், தினேஷ் ஆகிய எட்டு பேரும் கல்லூரியில் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். அதனால் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து , கொல்ல வேண்டும் என்று நினைத்த நபர்களை கொல்ல ஒரு வித்தியாசமான முறையில் திட்டம் போட்டார்கள். அவர்களை கொல்லும் போது எந்த வித தடையும் இல்லாமல் கொல்ல வேண்டும் என்று நினைத்தனர் அதனால், தான் கொல்ல வேண்டிய விரோதிகளை மற்ற நண்பர்களை வைத்து கொல்ல வேண்டும் என்று திட்டம் போட்டார்கள்.
உதாரணமாக...
ஆதவனின் விரோதியாக இருப்பவர் மாதேஷ். மாதேஷை கொல்ல தான் தன் நண்பரான தர்ஷனை அழைத்து வந்தார் ஆனால் ஆதவன் மாதேஷை கொன்றால் முன்விரோதம் காரணமாக கொன்று விட்டான் என்று காவல்துறைக்கு தெரிந்து விடும் அதனால் இக்கொலைக்கு சம்பந்தம் இல்லாத தன் நண்பரான புவனேஷை வைத்து மாதேஷை கொல்ல திட்டமிட்டார். இப்படி செய்தால் ஆதாரம் எதுவும் கிடைக்காது என்பதால் அந்த எட்டு நண்பர்களும் இந்த திட்டத்தை உருவாக்கினார்கள்.
ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி தன் எதிரிகளை கொடூரமான முறையில் திட்டமிட்டபடி கொன்றனர் ஆனால் ஆதாரம் எதுவும் கிடைக்காததால் காவல் துறைக்கு பெரிய சிக்கலாக இருந்தது ஆனால் ஆதவன் நண்பர்கள் அனைவரும் நிம்மதியாக இருந்து வந்தனர்.